கால்பந்து விளையாட்டுகளில் சூதாட்டத்தை எந்தவொரு சூழ்நிலையிலும் மீபா ஆதரிக்காது என்று அதன் தலைவர் டத்தோ டி. மோகன் நேற்று திட்ட வட்டமாக கூறினார். நேற்று முன்தினம் மீபா விளையாட்டாளர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்ததன் தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ டி.மோகன் இவ்வாறு பேசினார். கஷ்டமான சூழலில் இந்திய சமுதாய கால்பந்து விளையாட் டாளர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்த மீபா செயல்பட்டு வருகிறது. அந்த நிலையில் மீபா அணியில் ஒரு சிலரின் நடவடிக் கைகளினால் ஒட்டு மொத்த அணியும் பாதிக்கப்படுகிறது. மீபா அணியில் மட்டுமல்லாது மற்ற மற்ற அணிகளிலும் இது மாதிரியான பிரச்சினைகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. மீபா அணியில் ஒரு சிலர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் நிர்வாகம் ரகசிய ஆய்வு செய்தது. அதன் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்தே மூன்று விளையாட் டாளர்களை எம்ஏசிசி கைது செய்து விசாரணை செய்து வருகிறது. ஒரு சிலரின் சுய நலப்போக்குக் காக மலேசிய கால்பந்துத் துறை பாதிக்கப்படக் கூடாது. இந்த மாதிரியான புல்லுருவிகளை களையெடுக்க வேண்டும். தரமாக விளை யாடும் அணி தோல்வி பெறுவதற்கும், தரமில் லாத அணி வெற்றி பெறுவதற் கும் கால்பந்துத்துறை சூதாட் டங்கள் காரணமாகின்றன. இந்த நிலை நீடித்தால் மலேசிய கால்பந்துத் துறையின் தரம் நிச்சயம் பாதிக்கப்படுமென டத்தோ டி.மோகன் குறிப் பிட்டார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்