உலக இளையோர் ஸ்குவாஷ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை வெல்வதே அடுத்த இலக்கு என்று தேசிய வீராங்கனை எஸ். சிவசங்கரி நேற்று கூறி னார். 2017ஆம் ஆண்டுகால உலக இளையோர் ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டி வரும் ஜூலை மாதத்தில் நியூஸிலாந்தின் தாவ்ரான்கோ நகரில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் களமிறங்கி சாம் பியன் பட்டத்தை வெல்வதற்காக சிவசங்கரி கடுமையாக போராடி வருகிறார். உலக ஸ்குவாஷ் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 47ஆவது இடத்தில் இருக்கும் சிவசங்கரி 19 வயதுக்கு கீழ்ப்பட்டவர் களுக்கான பிரிவில் 6 பட்டங்களை வென்றுள்ளார்.தற்போது உலக இளையோர் ஸ்குவாஷ் போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக தயாராகி வருகிறார். இது குறித்து சிவசங்கரி கூறியதாவது, டத்தோ நிக்கோல் அன் டேவிட் தான் எனக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார். அவ்வப்போது அவரை சந்தித்து ஸ்குவாஷ் விளையாட்டை குறித்து பல ஆலோசனைகளை பெற்று வருகிறேன். அவரின் ஆலோசனைகளும், பயிற்சிகளும் எனக்கு புதிய நம்பிக்கையை தந்துள்ளது. உலக இளையோர் ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதி ஆட்டம் வரை முன்னேறினேன். இவ்வாண்டும் நிச்சயம் சாம்பியன் பட்டத்தை வெல்வேன் என்று சிவசங்கரி நம்பிக்கை தெரிவித்தார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்