டத்தோ பாலகிருஷ்ணன் கிண்ண கால்பந்துப் போட்டி யில் துன் அமினா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப்படைத்துள்ளனர்.ஜொகூர் மாநில முன்னாள் மஇகா தலைவர் டத்தோ கே.எஸ். பாலகிருஷ்ணன் பெயரில் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டி அறிமுகம் கண்டதிலிருந்து கடந்த இரு ஆண்டுகளாக முதல் நிலையில் வென்று சுழற்கிண்ணத்தை வென்ற துன் அமினா தமிழ்ப்பள்ளி மாண வர்கள் மூன்றாம் ஆண்டா கவும் வென்றுள்ளனர். ஜொகூர் மாநில மஇகா இளைஞர் பகுதி ஏற்பாட் டில் நடை பெற்ற இப்போட்டியின் இறுதியில் 11 குழுக்கள் பங்கு கொண்ட வேளையில் இரண்டாம் நிலையில் மெங்கிபோல் தமிழ்ப்பள்ளியும், மூன்றாம் நிலையில் சா ஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளியும் நான்காம் நிலையில் பத்து அன்னம் தமிழ்ப்பள்ளியும் வந்தன. 12 வயதுக்குட்பட்ட இப்போட்டியை ஜொகூர் மஇகா இளைஞர் பகுதியின் விளையாட்டுப் பிரிவு தலைவர் ரமேஷ் தொடக்கி வைத்த வேளையில் மாநில மஇகா பொருளாளர் ஆர். குமரன் முடித்து வைத்து வெற்றி யாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். போட்டியில் முதல் நிலையில் வந்த துன் அமினா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சுழற்கிண்ணம் உட்பட இதர பரிசுகள் வழங்கப்பட்டன. இதனிடையே துன் அமினா பள்ளி மாணவர்கள் வாகை சூட அயராது பயிற்சிகள் வழங்கிய ஆசிரியர்கள் பரஞ்ஜோதி, வேலு, பூஞ்செழியன் மற்றும் மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் என். ரவீந்திரன் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். இப்போட்டியில் துன் அமினா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எஸ். மஷார்வின் சிறந்த விளையாட்டு வீரராகவும், தவான் சிறந்த கோல் கீப்பராகவும் தேர்வு செய்யப் பட்டனர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்