கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (2) கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் கொல்லப் பட்ட கிம் சோய் என்ற வட கொரி யர் கிம் ஜோங் நாம்-தான் என்பதை போலீசார் நேற்று உறுதி செய்தனர். வட கொரிய அத்பரின் தம்பியான அவரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படாமல் இருந்தது. இதற்கு அவரின் குடும்பத்தார் மரபணு சொதனை அவசியம் என்றும் போலீஸ் கூறியிருந்தது. எனினும், நேற்று முன்தினம் இரவு அவரின் அடையாளத்தை தாங்கள் உறுதி செய்ததாக போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறினார். எனினும், இது எப்படி சாத்தியமானது என்பதை அவர் வெளியிட மறுத்து விட்டார். நாங்கள் எப்படி அவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தினோம் என் பதை எங்களால் அம்பலப்படுத்த முடியாது. ஆனால், கொல்லப்பட்ட அந்த கொரியர் கிம் ஜோங் நாம்-தான் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், அவரின் சடலம் மலேசிய சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் சொன்னார். முறைப்படி அவரின் உடலை அவரின் குடும்ப உறுப்பினர்களிடம்தான் நாங்கள் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அதனை பெற்றுச்செல்ல குடும்ப உறுப் பினர்கள் யாரும் முன்வராததால் மலேசிய சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கிறோம். அந்த சடலம் இனிமேலும் எங்களுக்குத் தேவையில்லை என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்