img
img

பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி
வெள்ளி 24 மே 2024 11:07:10

img

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற தேசியக் கல்வி கடனுதவிக் கழகமானது Simpan SSPN என்ற கல்வி சேமிப்பு திட்டத்தை பறைசாற்றுவதில் முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது.

அதிர்ஷ்ட குலுக்கல்-பரிவுமிக்க பரிசு திட்டம் இயக்கத்தை நடத்துவது உட்பட அநேக ஊக்குவிப்பு பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நம் வாழ்வில் அர்த்தப்பூர்வமான சேவையாற்றி வருபவர்களாக பாராட்டும் வண்ணம் அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம் என்று அடுக்கடுக்காக  கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த இயக்கத்தின் வழி 181 வெற்றியாளர்களுக்கு பி.டி.பி.டி.என். வழங்கும் ரொக்கப் பண வெகுமதியின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் வெள்ளியாகும். ஒரு வெற்றியாளருக்கு வழங்கும் முதலாவது பரிசு 10ஆயிரம் வெள்ளி. ஒவ்வொரு 180 வெற்றியாளருக்கு வழங்கப்படும் ஆறுதல் பரிசு 500 வெள்ளி. இவ்வியக்கம் SimpanSSPN Prime, Simpan SSPN Plus  போன்ற கல்வி சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ள அனைத்து முதலீட்டாளர்களுக்கும் இவ்வாய்ப்பு திறந்து விடப்படுகிறது. இத்தகைய ஏற்பாடு 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீடிக்கும்.

இத்தகைய திட்டத்தில் முதலீட்டாளர் சேர்ந்து பயன்பெற வேண்டுமானால் முதலீட்டாளர் சேமிப்பு கணக்கை திறக்க வேண்டும்   அல்லது இத்தகைய திட்ட அமலாக்கம் இருக்கும் காலகட்டத்தில் முதலீட்டாளர் தனது சேமிப்பு விகிதத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் 50 வெள்ளி சேமிப்பு தொகை ஒவ்வொன்றும் ஒருமுறை முலுக்கி எடுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். Simpan SSPN Plus என்ற திட்டத்தில் உள்ள ஒவ்வொரு 50 வெள்ளிக்கும் இயல்பாகவே இரண்டு முறை குலுக்கி எடுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.  My PTPTN பயனீட்டாளருக்கு cabutan berganda என்ற பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படும்.

My PTPTN அல்லது சம்பளப் பிடித்தம் வழி 50 வெள்ளி சேமிப்பு தொகையின்  Simpan SSPN Prime திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 5 முறை குலுக்கல் வாய்ப்பு வழங்கப்படும். அதே வேளையில்  My PTPTN அல்லது சம்பளப் பிடித்தம் மூலம் 50 வெள்ளி சேமிப்பு வைத்திருக்கும் Simpan SSPN Plus முதலீட்டாளருக்கு 10 குலுக்கல் வாய்ப்புக்கள் வழங்கப்படும்.

இந்த இயக்கத்தில் பங்கு கொள்ளும்  Simpan SSPN முதலீட்டாளர்கள் தலைசிறந்த வெகுமதியினை தட்டிச் செல்வதோடு Simpan SSPN என்ற கல்வி சேமிப்பு திட்டத்தின் பல்வேறு அனுகூலங்களையும் நன்மைகளையும் அனுபவிக்கலாம் என்று பி.டி.பி.டி.என் தலைவர் டத்தோ நோர்லிஷா அப்துல் ரஹிம் தெரிவித்தார். இத்தகைய சேமிப்பானது வருடத்திற்கு எட்டாயிரம் வெள்ளி வரையிலான வருமான வரி விலக்கிற்கு வகை செய்கிறது. முதலீட்டாளருக்கு தக்காபுல் காப்புறுதி வழங்குகிறது. தகுதி வாய்ந்த ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் வெள்ளி வரையிலான சீரான மானியத்திற்கு வகை செய்கிறது.

அனுகூலமான டிவிடென் விகிதம் கிட்டுகிறது.சேமிப்புக்கு அரசு உத்தரவாதம் உண்டு.

Simpan SSPN என்ற கல்விசேமிப்பு வழியாக நமது அன்புக்குரிய பிள்ளைகளின் கல்விக்காக முன்கூட்டியே சேமிப்பு திட்டத்தை தொடங்குகிறோம். கூடுதல் சேமிப்பு மற்றும் வெற்றி பெறும் வாய்ப்பும் கூடுதல். சேமிப்பு கணக்கு திறப்பு அல்லது சேமிப்பை கூட்டுவது எல்லாம் My PTPTN செயலி மூலம் இணையத்தளத்தின் மூலம் மேற்கொள்ளலாம் என்றும் இது மிகவும் எளிதான, துரிதமான மற்றும் பாதுகாப்பான ஒன்று என்று பி.டி.பி.டி.என். தலைவர் டத்தோ நோர்லிசா அப்துல் ரஹிம் எடுத்துரைத்தார்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையிலான விவரப்படி Simpan SSPN  என்ற கல்வி சேமிப்பு  திட்டத்தின் சேமிப்பு தொகை 17.75 பில்லியன் வெள்ளி என்றும் சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை 6.32 மில்லியன் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்கள் பெற www.ptptn.gov.my என்ற பி.டி.பி.டி என்.னின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை அலசுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img