கோலாலம்பூர், செப். 27-
மலேசிய இலக்கவியல் பொருளாதார நடவடிக்கை செயல் திட்டமானது 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய செயல் திட்டத்தை நிறைவு செய்வது 5ஜிஅலைக்கற்றை அமலாக்கம் முக்கிய பங்கினை வகிக்கிறது.
நாட்டின் இலக்கவியல் துறையினை உருமாற்றம் செய்வதில் 5ஜி தொழில்நுட்பம் முக்கிய அம்சமாக விளங்க இயலும். 5ஜி தொழில் நுட்பத்தின் மூலம் சுகாதாரத்துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்துத்துறை பெரும் பயனை அடைய இயலும்.
மலேசியா தொடக்கக்கட்டத்தில் டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் மூலம் 5ஜி அலைக்கற்றை மேம்படுத்தியது. SWN என்ற வழிமுறையானது 5ஜி அலைக்கற்றையின் அமலாக்கத்தை துரிதப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது.
5ஜி கட்டமைப்பினை மேம்படுத்தும் பொறுப்பினை இலக்கவியல் நேஷனல் பெர்ஹாட் என்ற டிஎன்பி மேற்கொண்டுள்ளது. மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை என்பது 2021ஆம் ஆண்டு இறுதியில் அமலாக்க நடவடிக்கை தொடங்கியது. தொடக்கக் கட்ட அமலாக்கம் கோலாலம்பூர், புத்ராஜெயா, சைபர் ஜெயா ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்தியது.
2024ஆம் ஆண்டு 2ஆம் காலாண்டு வரை 7,153 5ஜி தளங்கள் வெற்றிகரமாக அமைக்கப்பட்டன. திட்டமிடப்பட்ட ஆக மொத்த தளங்களின் எண்ணிக்கை 7,509. 5ஜி சேவையானது மக்கள் வசிக்கும் பகுதிகளில் 81.8% நிறைவை எட்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு 2ஆவது காலாண்டு வரையில் ஆக மொத்தம் 5ஜி சேவையினை பயன்படுத்திய தரப்பினர் எண்ணிக்கை 14.8 மில்லியன்.
5ஜி சேவையின் பயனீட்டை இது எடுத்துரைக்கிறது. இச்சேவையை பயன்படுத்திய பெரும்பான்மையோர் தனிப்பட்ட பயனீட்டாளர்கள் ஆவர். இத்தகைய தொழில்நுட்பத்தின் மீது மலேசியாவின் 5ஜி அமலாக்கம் என்பது இவ்வாண்டு 5ஜி அலைக்கற்றையின் இரட்டை மாதிரிக்கு மாறுகிறது.
இது இதர பாதிப்பு சாத்தியங்களை குறைப்பதாக இருக்கும். தொலைத்தொடர்பு தொழில் துறை சீராக இயங்குவதற்கு இது உகந்த சூழலை ஏற்படுத்தித்தரும். இதுபோன்ற மாற்றம் சேவையின் தரத்தை உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இடையூறுகளை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால் சேவைகளை ஏற்படுத்தித் தரும் தரப்பினர் மீதிலான பயனீட்டாளர்களின் நம்பிக்கையினை இது வலுப்படுத்துவதாக விளங்கும். தொழில்துறையில் 5ஜி தொழில் நுட்பத்தை ஊக்குவிக்கும் வண்ணம் மலேசியா முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பெட்ரோனாஸுக்கு சொந்தமான முதலாவது தனிப்பட்ட 5ஜி அலைக்கற்றை 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடிலா யூசோப் தொடக்கி வைத்தார். மலாக்கா, சுங்கை ஊடாங் முனையத்தில் பயன்படுத்தப்பட்ட ஒன்று இந்த தனிப்பட்ட 5ஜி அலைக்கற்றையின் வழி பெட்ரோனாஸ் தரையின் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து தொலைதூர கண்காணிப்பு நடவடிக்கையினை முழுமையாக அமலாக்கம் செய்ய இயலுகிறது.
தக்க தரவுகளை சேர்த்து ஆய்வு நடத்தப்படுகிறது. இதனால் செயல்படும் திறனும் மேலோங்குகிறது. மலேசியாவில் 5ஜி தொழில்நுட்ப வளர்ச்சியினை பொறுத்தவரையில் பெருமைப்படக்கூடிய சாதனைகளில் ஒன்றை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்று. Teknologi 5G - Advanced மூலம் 2024 மலேசிய சுக்மா விளையாட்டை நேரடி ஒளிபரப்பு செய்தது நாம் பெற்ற வெற்றிகளில் ஒன்று. இத்தகைய முன்முயற்சிக்கு செல்கோம் டிஜி, யுமொபைல், ஆர்டிஎம் ஆகிய தரப்புகள்
உறுதுணையாக இருந்தன.
5ஜி பயன்பாடு தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒளிபரப்புத்துறை உட்பட இத்தகைய தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் மலேசியாவின் ஆற்றல் மேலோங்கி வருகிறது. 2024ஆம் ஆண்டு சுக்மா போட்டி விளையாட்டை சாமர்த்தியமாக கண்டு களிக்கக்கூடிய தொழில்நுட்பத்திற்கு உதவி செய்துள்ளது.
சாமர்த்தியமான செயற்கை நுண்ணறிவும் இதில் அடங்கும். 5G - Advanced தொழில்நுட்பம் இதற்கு எல்லாம் வகை செய்துள்ளது. 2024ஆம் ஆண்டு சுக்மாவை கண்டுகளிக்கும் அனுபவத்தை மெக்சிஸ் உயர்த்தியுள்ளது. அரங்கில் பல்வேறு முனைகளில் உயர்தர கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆட்டத்தை கண்டுகளிக்கும் அனுபவம் ஆனந்தமாகவும் விவரம் உள்ளதாகவும் விளங்குகிறது.
டெலிகோம் மலேசியாவானது புத்தாக்க மையத்தையும் தொழில்மய 5ஜி மையத்தையும் தொடங்கியுள்ளது. 5ஜி தொழில்நுட்ப அடிப்படையில் புத்தாக்கம் பிரச்சினைக்கு துரிதகதியில் பரிகாரம் காணும் வண்ணம் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
தொழில்துறை மற்றும் அரசாங்கத்துறையின் தேவைக்கேற்ப இவையெல்லாம் சரிசெய்யபட்டுள்ளது. இதுபோன்ற முன்முயற்சி திட்டங்கள் மூலம் மலேசியா சரியான தளத்தில் இருந்து வருகிறது. இலக்கவியல் உருமாற்றத் திட்டத்தில் மலேசியாவின் நிலையினை மேலும் வலுப்படுத்தும்.
சமுதாயம் மற்றும் நாட்டின் பொருளாதார நன்மைக்காக தொழில்நுட்பத்தை முழு வீச்சில் பயன்படுத்திக் கொள்ள முடியும். பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் இடையில் நிலவும் நெருக்கமான ஒத்துழைப்பானது மலேசியாவை புத்தாக்கத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும். தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் தென்கிழக்காசியாவில் மலேசியாவின் நிலை உயரும்.
5ஜி வசதிகளை மக்கள் அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் கடமை, கடப்பாட்டினை அரசாங்கம் கொண்டுள்ளது என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். 5ஜி இரட்டை அலைக்கற்றையின் வழி தொடர்புத்துறை அமைச்சு போட்டியாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்