வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்
செவ்வாய் 09 ஜூலை 2024 14:36:02

img

கோலாலம்பூர், ஜூலை 4-

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற தேசியக்கல்வி கடனுதவிக் கழகம் எப்போதுமே வாடிக்கையாளர்களுக்கு பக்கபலமாக பல்வேறு முன்முயற்சித் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
தற்போதைய நிச்சயமற்ற பொருளாதார நிலைமையால் மலேசிய சமுதாயம் எதிர்நோக்கும் சிரமங்களை பி.டி.பி.டி.என். கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.  எனவே பி.டி.பி.டி.என். கடனுதவி பெற்றவர்களுக்கு பிரத்தியேகமாக Kempen Strukturkan Pinjaman Anda Serendah RM 300 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது 300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை திருப்பி செலுத்தும் சீராய்வு முறை இது.
இத்தகைய சீராய்வு கடன் திட்டம் ஒரு பிரத்தியேகமான முன்முயற்சி திட்டம். பி.டி.பி.டி.என். கடன் பாக்கி உள்ளவர்களும் இது ஊக்கமூட்டும் மற்றும் ஆதரவு தரும் ஒன்று. கடன் பாக்கி உள்ளவர்கள் குறைந்த விகிதம் 300 வெள்ளியை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் கடன் பாக்கிக்கு பரிகாரம் காண இயலும்.
அதாவது untuk menyelesaikan tunggakan mereka dengan bayaran awal serendah RM 300 sahaja). இத்தகைய சீராய்வு கடனுதவி திட்டமானது 2 மாத காலம் நீடிக்கும். 2024ஆம் ஆண்டு ஜூன் மாத முதல் தேதியிலிருந்து ஜூலை 31ஆம் தேதிவரை நீடிக்கும்.
இத்தகைய சீராய்வு கடன் திட்டமானது கடன் பாக்கி கொண்டவர்களுக்கு திறந்து விடப்படுகிறது. கடன் பாக்கி உள்ளவர்கள் கடனை சீராய்வு செய்வதற்காக கடன் பாக்கியை அடைப்பதற்கு செலுத்த வேண்டிய தொகை வெறும் 300 வெள்ளிதான். இவர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்வது அல்லது நேரடியாக டெபிட் முறையில் பணத்தை செலுத்துவது கடனை திருப்பிச் செலுத்தும் வழிமுறையாகும்.
கல்விக்கடன் பெற்றவர்கள் தொடர்ச்சியாக முறையான முறையில் கடனை அடைப்பதை இது உறுதிப்படுத்தும். இந்தக் கடன் சீராய்வு திட்டத்தோடு கடன் பெற்றவர்கள் வேறு வகையில் கடனை திருப்பிச் செலுத்துவது குறித்து பி.டி.பி.டி.என்.னுடன் பேச்சு வார்த்தை நடத்தலாம். இந்த பிரச்சார காலகட்டத்தின்போது மேற்கண்ட அணுகுமுறையினை பின்பற்றலாம். (Selain penstrukturan, peminjam juga boleh membuat rundingan bayaran balik yang lain seperti pertukaran ujrah, penggabungan pinjaman dan penjadualan semasa tempoh kempen ini.)
கல்விக்கடன் பெற்றவர்களுக்கு இத்தகைய பிரச்சார திட்டம் பல்வேறு பயன்களை வழங்குவதாக பி.டி.பி.டி.என். தலைவர் டத்தோ நோர்லிஷா அப்துல் ரஹிம் தெரிவித்தார். கடன் பாக்கியை குறைக்கவும் அறவே கடன் பாக்கி இல்லாத நிலையினை அடைவதற்கு இதுவெல்லாம் உதவுகிறது. கடனை அடைப்பதில் கடன் பெற்றவர்கள் மேற்கொள்ளும் அணுகுமுறையினை மேம்படுத்தவும் இது உறுதுணையாக இருக்கிறது.
இத்தகைய கடன் உதவி சீராய்வு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வசதியான வாய்ப்புகளை பி.டி.பி.டி.என். வாடிக்கையாளர்க்ள நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள விடுக்கப்படுகிறது.
கடன் பாக்கி இல்லாமல் ஒளிமயமான எதிர்காலம் உருவாகுவதை இது உறுதிப்படுத்தும். இத்தகைய நல்வாய்ப்பை நழுவ விடாதீர். கல்விக்கடனை திருப்பி செலுத்தும் கடமை கடப்பாடு பெரிதும் போற்றப்படுகிறது. வருங்கால தலைமுறையினரின் பிள்ளைகள் இக்கல்வி கடன் உதவி பயனை தொடர்ந்து அனுபவிக்க இது ஏதுவாக ருக்கும்.
நிதி சிரமம் காரணமாக உயர்க்கல்வி நிலையத்தில் எந்தவோர் மாணவரும் சேர முடியாத நிலை ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இதனை உறுதிப்படுத்துவது அவசியம். பி.டி.பி.டி.என். என்ற தேசியக்கல்வி கடனுதவிக் கழகம் பல்வேறு பரிவுமிக்க திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இந்த காலகட்டத்திலேயே கடன் பெற்றவர்களே இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக டத்தோ நோர்லிஷா தெரிவித்தார். மேற்கொண்ட விவரங்கள் பெற்றுக் கொள்வதற்கும் வேறு வழிமுறைகளில் ஏற்பாடு செய்வதற்கான உடன்படிக்கை குறித்தது பின்வரும் தரப்புடன் தொடர்பு கொள்ளலாம்.

* Careline PTPTN di 03-2193 3000 (திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை)

* Live chat di portal PTPTN (www.ptptn.gov.my)

* E-Aduan PTPTN (https://eaduan.ptptn.gov.my)

* Eksekutif Jualan PTPTN (https://www.ptptn.gov. my / hubungi - PTPTN

* PTPTN அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளம்

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img