img
img

போப் என்ற project point of Presence (pop) திட்டம்
வியாழன் 14 நவம்பர் 2024 13:16:59

img

கோலாலம்பூர், நவ. 7-

 

NFCP 2019 -2023 என்ற நேஷனல் Fiberstion and Conectivity,  திட்டத்திற்கு அமைச்சரவைக் கூட்டம் 2021 ஆம் ஜூன் மாதம் இரண்டாம் தேதியன்று அங்கீகாரம் தந்தது. இது JENDELA என்ற தேசிய இலக்கவியல் இணைப்புத் திட்டமாக மறுவடிவம் கண்டது.

 

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையமானது ஓர் இலக்கினை வகுத்தது. அதாவது 2025 ஆம் ஆண்டு வாக்கில் குடியிருப்பு பகுதிகளில் 100 விழுக்காடு இணையத்தள சேவையினை ஏற்படுத்துவதே இதன் இலக்காகும். புறநகர் பகுதி மற்றும் உட்புற பகுதிகளுக்கு யுஎஸ்பி நிதிவழி கட்டமைப்பு மற்றும் அடிப்படை தொடர்புத்துறை வசதிகளை அரசாங்கம் மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையத்தின் வழி ஏற்படுத்தி தரும்.

 

நாடு முழுவதும் JENDELAஎன்ற தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் 2024ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி  வரையிலான அடைவு நிலை பின்வருமாறு.

 

ஏ: 8.82 மில்லியன் அலுவலகங்கள் Capaian gentian optikவசதிகளை  பெற்றுள்ளது.

 

பி: Jalur lebar mudah alih வேகம் 106.94 Mbps

 

சி: குடியிருப்பு பகுதியில் அகண்ட அலைவரிசை சேவையின்  விழுக்காடு 97.28 சதவிகிதம்.

 

 

 

நோக்கம்

 

Rangkaian Hab Gentian Optik Point of Presence  என்ற அலைக்கற்றைப் பயன்படுத்தி அகண்ட அலைவரிசை கட்டமைப்பை ஏற்படுத்தி தருதல். இது மாற்று வழி முறைகளில் ஒன்று. பள்ளி பகுதிகளில் குடியிருப்பு இடங்களில் வர்த்தக தளங்கள் தொழில் துறை ஆகிய பகுதிகளில் அகண்ட அலைவரிசை வசதிகள் தலைசிறந்த முறையில் விரிவாக்கம் காணப்படுவதை இதுவெல்லாம் உறுதிப்படுத்தும். ஒவ்வொரு பள்ளிக்குமானJarak liputan pop  சேவையின் தூரம் ஏறத்த 2.5 கிலோ மீட்டரில் இருந்து  3 கிலோ மீட்டர் பரப்பளவு.

 

இத்தகைய முன் முயற்சி திட்டம் அமலுக்கு வருவதால் சம்பந்தப்பட்ட பகுதி வாழ் மக்களுக்கு தங்களின் இல்லங்களில் நிரந்தர இணைய தளம் இணைப்பு சேவை கிட்டுவதற்கு வழி வகுக்கும்.

 

சேவையின் நிலைத்தன்மையினை குறைவாக பெற்று இருக்கும் Internet muda alih  என்ற இணையதள சேவையினை குடியிருப்பாளர்கள் சார்ந்திருக்க வேண்டியதில்லை.

 

 

 

இலக்கு

 

மாணவர்கள்  கல்வியாளர்கள் தொழிலாளர்கள் அரசாங்க அலுவலகங்களில் பணி புரியும் அரசு ஊழியர்கள் ஆகிய தரப்பினரை Projek Pop  திட்டமானது இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதோடு சுற்று வட்டார சமூகம் உயரிய வேகமிக்க அகண்ட அலைவரிசை சேவையினை அனுபவிக்க இயலும்.

 

கிராமப்புற பகுதியில் அல்லது உள்பகுதியில் குடியிருந்தாலும் இத்தகைய நன்மை கிட்டும். இத்திட்டத்தை அமலாக்கம் செய்வது என்பது பள்ளி, தொழில் பேட்டை, அருகில் உள்ள அரசாங்க கட்டடங்கள்,  சுற்று வட்டார சமுதாயம் ஆகிய தரப்பினர் அகண்ட அலைவரிசை சேவையினை பயன்படுத்திக் கொள்வதற்கு பள்ளியினை ஒரு தளமாக உருமாற்றம் செய்யும்.

 

 

 

திட்டம் ஏற்படுத்த விருக்கும்

 

நேர்மறையான தாக்கம்

 

 

 

பள்ளி மற்றும் குடியிருப்பு வட்டாரங்களில் அகண்ட அலைவரிசை சேவை விரிவாக்கம் செய்யப்படுவதை உறுதி படுத்தும் மாற்று வழிமுறைகளில் இது ஒன்று. குடியிருப்பு பகுதிகளில் மிகவும் நிலைத்தன்மை வாய்ந்த நிரந்தர இணையதள இணைப்பு சேவை கிட்டுவதற்கு இது வழிவகுக்கும்.

 

பள்ளிகளில் கற்றல் வழிமுறைகளை மேம்படுத்தும். தகவல் பரிமாற்றம் சீராகவும் சிறப்பாகவும் நடைபெறும். புறநகர் பகுதிகளில் இலக்கவியல் பொருளாதார அடிப்படையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இது வாய்ப்பு வழங்கும்.

 

இணைய தளத்தின் வழி வீட்டில் வியாபாரம் உட்பட பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை புறநகர் மக்கள்  மேற்கொள்ள இயலும்.

 

இது இலக்கவியல் இடைவெளியினை குறைக்கும் Popதிட்டமானது கட்டம் கட்டமாக அமலுக்கு வரும். முதலாவது கட்டம் 2021ஆம் ஆண்டிலிருந்து 2027ஆம் ஆண்டு வரை. இதற்கான ஒதுக்கீடு 700 மில்லியன்.

 

இரண்டாவது கட்டம்2022ஆம் ஆண்டிலிருந்து 2030ஆம் ஆண்டுவரை.  இதற்கான ஒதுக்கீடு 3.9 பில்லியன்.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img