இந்தோனேசியப் பணிப்பெண்ணை கொலை செய்ததாகவும் கம்போடிய பணிப்பெண்ணுக்கு கடுமையான காயம் ஏற்படுத்திய தாகவும் சான் லாய் லீ (வயது 42) எனும் மாது மீது நேற்று இரு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டது. லெபோ ராயா ஜெலுத்தோங்கிலுள்ள சானின் வீட்டில் ஜூலை 2016 முதல் நடப்பாண்டு பிப்ரவரி 25 வரை அனாட் (வயது 22) எனும் கம்போடிய மாதை இரும்புக் கம்பியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக சான் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பில் அவர் விசாரணை கோரியுள்ளார். அதையடுத்து ஜுபைடா (வயது 38) எனும் இந்தோனேசிய மாதை கொலை செய்ததாக சான் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. சானுக்கு பிணை அனுமதிக்கப்படவில்லை. இவ்வழக்கின் மறு பரி சீலனையை மே 11இல் மேற்கொள்ள செஷன்ஸ் நீதிபதி இர்வான் ஸ்வாய்ன்பான், மாஜிஸ்திரேட் முகமட் அமின் ஷாகுல் ஹமிட் ஆகிய இருவரும் தேதி நிர்ணயித்துள்ளனர். சானும் அவரின் கணவ (வயது 48) ரும் கடந்த பிப்ரவரி 26இல் கைது செய்யப்பட்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்