பண்டார் துன் ஹுசேன், ஜாலான் சுவாகாசேயில் நேற்று முன் தினம் நள்ளிரவில் 39 வயது ஆடவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இறந்து கிடக் கக் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் இறந்து கிடந்த வீடு ஒரு தொழில் அதிபருக்கு சொந்த மானது என்றும், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்த சம யத்தில் அந்த ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஒஸ்மான் நான்யான் கூறினார். இரவு 12.30 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே வேட்டுச் சத்தம் கேட்டதாகவும், பிறகு கையில் துப்பாக்கியுடன் அந்த ஆடவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை தாம் பார்த்ததாகவும் அந்த தொழில் அதிபர் போலீஸ் வாக்குமூலத்தில் கூறினார். அவரை பரிசோதித்ததில் ஆடவரின் நெற்றிப் பொட்டில் துப் பாக்கிச் சூட்டு காயம் காணப்பட்டது. அது ஒரு தற்கொலை என்று தெரிய வந்திருப்பதாக ஒஸ்மான் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்