டத்தோ ஸ்ரீ பழனிவேலை ம.இ.கா. தலைவர் பதவியிலிருந்து கவிழ்ப்பதற்கு கூட்டுச் சதி செய்ததாக டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் உட்பட 8 பேருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறக் கோரி மத்திய செயலவை உறுப்பினர், செனட்டர் உட்பட அரசாங்க பதவிகள் பேரம் பேசப்பட்ட திடுக்கிடும் தக வல் நேற்று அம்பலமானது.மஇகா தேர்தல் விவகாரத்தில் நடந்த குளறுபடிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் தலைமையிலான 8 பேருக்கு எதிராக டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை சென்ற இவ்வழக்கில் தீர்ப்பு டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பைச் சேர்ந்த 8 பேருக்கு சாதகமாக முடிந்தது. இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் முழுமையாக விசாரணைக்கு கொண்டு வரப்பட வேண்டும். இதில் சுப்பிரமணியம் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருந்தது. இந்நிலையில் பழனி தரப்பினருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் சாதகமாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் தரப்பினர் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரக்கூடாது என்பதற்காக கூட்டரசு நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த அனுமதி கோரப்பட்டதற்கான முடிவு வரும் மே 8ஆம் தேதி நமக்கு தெரிய வரும். அம்முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவும் எங்களுக்கு சாதகமாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.ஆகவே அந்த சோதனையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஏ.கே. இராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறினார்.வழக்கு பதிவு செய்த 8 பேரில் ஐவர் வழக்கை வாபஸ் செய்து விட்டனர் என்று பல செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணமாக இருந்தன. அச்செய்திகளில் எந்தவோர் உண்மையும் இல்லை. நாங்கள் 8 பேரும் ஒற்றுமையாக தான் உள்ளோம். எந்த நேரத்திலும் சோரம் போக மாட்டோம் என்று இராமலிங்கம் கூறினார்.இதனிடையே மஇகாவில் இணைவதற்காக எனக்கும், டத்தோ ஹென்றிக்கும் மத்திய செயலவை உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டன. அதே வேளையில் இப்பதவியை ஏற்று மஇகாவில் இணைந்திருந்தால் செனட்டர் அல்லது அரசாங்க பதவிகள் வழங்குவதற்கும் சுப்ரா தரப்பினர் எங்களுடன் பேரம் பேசினார்கள். ஆனால் அந்த பேரத்தை நாங்கள் ஏற்க மறுத்து விட்டோம் என்று 2013 தேர்தலில் உதவித் தலைவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் கூறினார். மஇகா தலைவராக இருந்த டத்தோஸ்ரீ பழனிவேலுவை வீழ்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்த வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட தொகுதி, கிளை தலைவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் அனைவரும் ஆரம்பத்தில் இருந்தே போராடி வருகிறோம். இப்போராட்டத்தில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பதவிக்கும் பட்டத்திற்கும் ஆசைப்பட்டு நீதி போராட்டத்தில் இருந்து விலக எங்களுக்கு துளியும் விருப்பமில்லை. இறுதிவரை நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து போராட தயார் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.மஇகா மத்திய செயலவை உறுப்பினர் பதவி எனக்கு வழங்கப்பட்டதுடன் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டது.அப்பதவியை நான் ஏற்க வேண்டுமானால் நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனையும் எனக்கு கொடுக்கப்பட்டது.இதேபோன்று பல தலைவர்களிடம் பேரம் பேசப்பட்டுள்ளதாக தகவல் எனக்கு கிடைத்தது. ஆனால் அதை நான் ஏற்கவில்லை என்று டத்தோ ஹென்றி நேற்று கூறினார். நீதிமன்ற வழக்கு என்னுடைய தனிப்பட்ட விவகாரம் அல்ல. கட்சியில் இருந்து பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் தொடரப்பட்ட வழக்காகும் இது. பதவிக்காக இவ்வழக்கை வாபஸ் பெற வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. நீதி போராட்டம் தொடரும் என்று டத்தோ ஹென்றி கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்