அரசியல் தலைவர்களே இந்நாட்டில் அதிகமாக ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அர்மாடா பெர்சத்து எனும் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மலாய்க்காரர்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துபவர்கள் தாங்களே என கூறிக் கொண்டுவரும் அவர்களே மலாய்க் காரர்களின் உரிமைகளை அடகு வைக்கும் வகையில் ஊழல் நடவடிக் கையில் ஈடுபட்டு வருவதாக அதன் தலைவர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் குற்றம் சாட்டினார். அரசியல் தலைவர்கள் ஊழல் நடவடிக் கையில் ஈடுபட்டுள்ளது இது முதன் முறை அல்ல எனவும் அவர் சொன்னார். இதற்கு முன்பு பூமிபுத்ராக்களின் நிலங்கள் பெயர் மாற்றம் செய்வதில் சிலர் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இதுபோன்ற சலுகைகள் மக்களுக்குப் போய்ச்சேர வேண்டும். ஆனால், இங்கு சிலர் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர் என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார். அண்மைக்காலமாக அதிகமான அரசியல் தலைவர்களும், அரசாங்க அதிகாரிகளும் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு வருவது குறித்து கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.உதாரணத்திற்கு சபா நீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஊழலை சுட்டிக் காட்டிய அவர், நாட்டில் அதிகமான இளைஞர்கள் சொந்த வீடு வாங்குவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு வருகிறார்கள் என்பதை நாடே அறியும் என்றார். இதுபோன்ற சாதாரண நிறுவனத்திலேயே இவ்வளவு ஊழல்கள் நிகழுகிறதே, வெளிநாடுகளிலுள்ள பெரிய திட்டங்களில் எவ்வளவு ஊழல்கள் நிகழும் என்பது யாருக்கும் தெரியும் என்றார். இது சிறிய மீன்தான், இன்னும் பெரிய மீன்கள் மாட்டவில்லை. இதுபோன்ற ஊழல்களில் ஈடுபடும் தனிப்பட்ட நபர் கள் நமக்கு தலைவர்களாக வர வேண்டுமா? நாம் சிந்திப்போம் என்று சைட் சடிக் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்