உலுபெர்ணம் சங்காட் சாலையில் அமைந்துள்ள தாமான் டானாவ் பிபிஆர் மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் மொத்தம் 300 வீடுகள் நிர்மாணிக்கப்பட் டுள்ளன. அவற்றில் இந்தியர்களுக்கு 64 வீடுகள் வழங்கப்பட்ட நிலையில், தங்களுக்கு வீடுகள் கிடைக்காத மற்றொரு தரப்பினர் நேற்று மறியலில் ஈடு பட்டனர். பிபிஆர் வீடுகளுக்கு தகுதிப்பெற்றவர்களிடம் சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஓமார் தலைமையில் இங்கு நடைபெற்றது. மொத்தம் 184 பேர் இந்த வீடுகளுக்கு தேர்வு பெற்றனர். அவர்களில் 64 ஏழை இந்தியர்களும் அடங்குவர். எனினும், அருகிலுள்ள கம்போங் ஹசானில் வாழ்ந்து வரும் எங்களுக்கும் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப் படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் எங்களுக்கு அச்சலுகை வழங்கப்படவில்லை என்று சிலர் அதிருப்தி தெரிவித்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தாங்கள் முறையாக விண்ணப்பம் செய்திருந்தும், வீடுகளுக்கான எண்கள் வழங்கப்பட்டிருந்தும் வீட்டுக்கான முன்பணம் செலுத்துவதில் சற்று தாம தமானதால் எங்களுக்கு வீடு இல்லை என்று நிராகரிப்பது நியாயமில்லை என்று அவர்கள் மனக்குறையை வெளிப்படுத்தினர். இதனிடையே, இந்த சாவிகள் வழங்கும் நிகழ்வில் 64 இந்தியர்கள் புதிய வீடுகளை பெற்றனர். அருகிலுள்ள கம்போங் ஹசான் மேம்படுத்தப்படவிருப்பதால் அங்கு வாழ்ந்த இந்திய மற்றும் சீன குடும்பங்களுக்கு மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் வீடுகளை வாங்குவதற்கு முன்னுரிமை வழங்கப் பட்டிருந்தது. இதில் தேர்வு பெற்ற 184 பேருக்கு டான்ஸ்ரீ நோ ஓமார் வீட்டுச் சாவிகளை ஒப்படைத்தார். அவர்களுள் 64 வசதி குறைந்த இந்தியக் குடும்பங்களும் அடங் குவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே வீட்டிற்கான முழுத் தொகையினை அரசாங்க மற்றும் வங்கிக் கடன்வழி ஏற்பாடு செய்திருந்த 116 பேர் அவ்வீடுகளில் குடி புகுந்து விட்டனர். 26 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட தாமான் டானாவ் வீடமைப்புத் திட்டத்தில் 750 சதுர அடியைக் கொண்ட வெ. 35,000 மதிப்புடைய, 300 தரை வீடுகள் வெ 420 லட்சம் செலவில் கட்டப்பட்டன. அத்திட்டத்தில் மக்களின் பயனுக்காக பொது மண்டபம், பாலர் பள்ளி, சிறுவர்கள் விளையாட்டு பூங்கா, மைதா னம் மற்றும் மசூதிகளும் கட்டப் பட்டுள்ளன. கடந்த 2011 ஆண்டு தொடக்கம் தேசிய முன்னணி அரசாங்கம் சிலாங்கூரில் வசதி குறைந்த மக்களுக்காக 4 வீடமைப்புத் திட்டங்களின்வழி லெம்பா சுபாங், செரண்டா, லெம்பா சுபாங் 2 மற்றும் தாமான் டானாவில் மொத்தம் 5184 மலிவுவிலை வீடுகளைக் கட்டி யுள்ளதாக அமைச்சர் நோ ஓமார் தெரிவித்தார். இந்நிகழ்வில், ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்