பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர் பிலிப் டமாயன் த/பெ மாணிக்கம் (வயது 15) நீரில் மூழ்கினார். இத்துயரச் சம்பவம் நேற்றுக் காலை 11.40 மணியளவில் கம்போங் சங்லாங் அருகே சுங்கை கிரியான் ஆற்றில் நிகழ்ந்தது. சம்பவத்தின் போது மேலும் 3 நண்பர்களுடன் இப் பகுதியிலுள்ள ஓய்வெடுக்கும் பகுதி ஒன்றிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தூரம் சென்று குளிப்பதற்கு ஆற்றில் இறங்கிய போது நீரினால் அடித்துச் செல்லப்பட்டார். உதவி கேட்டு கூச்சலிட்ட போது ஓடி வந்த சக நண்பர்கள் ஆற்றில் குதித்து அவரை காப்பாற்ற முற்பட்ட போது இயலாமல் போனதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த நிபோங் திபால் தீயணைப்பு, மீட்புப் படையினர், பொது தற்காப்புப் படையினர், முக்குளிப்புப் படையினர் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டும் மாலை 7 மணி வரையில் எந்தவொரு அடையாளமும் கிடைக்க வில்லை. தேடும் பணியும் தொடர்கின்றது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்