வடகொரியாவுடனான பதற்றத்தை கையாளுவதில் மலேசியா போதிய திறனைக் கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தெரிவித்தார். இதுபோன்ற பதற்ற சூழ்நிலை இதற்கு முன்பு நிகழ்ந்திருக்க வில்லை. மலேசியா முதன் முதலில் இப்படியொரு நெருக் கடியை எதிர்நோக்கி யிருப்பதால் இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து அது போதுமான திறனையும் அனுபவத்தையும் கொண்டி ருக்கவில்லை என்றார் அவர். வடகொரியாவை மலேசியா தனது எதிரியாக்கக் கூடாது என டாக்டர் மகாதீர் முகமட் குறிப்பிட்டார். மலேசியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையி லான அரச தந்திர நீதியிலான நடப்பு பதற்றத்தை நாம் புத்திசாலித் தனமாக கையாண்டு இருக்க வேண்டும். அத்துடன் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நாம் முதல் முறையாக எதிர் கொண்டுள்ள நிலையில் இதை நாம் கற்றுக் கொள்ளும் வகையிலான ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும். ஏனெனில் நம் நாட்டில் அந்நியர்கள் ஏராளமானோர் உள் ளனர். அது இந்நாட்டிற்கு நன்மையளிக்காத விஷயங்களை கொண்டு வரலாம் என்றார் டாக்டர் மகாதீர். வடகொரியாவுடனான நெருக்கடியை அரசாங்கம் இன்னும் நன்றாகக் கையாண் டிருக்க முடியும். எனினும் அது அவ்வாறு செய்யவில்லை. அதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. அது இதுபோன்ற விஷயங்களை கையாள்வதில் அனுபவமின்மையால் இருக்கலாம். இதுபோன்ற சச்சரவுகள் தமது நிர்வாகத்தின் போது ஒருபோதும் நிகழ்ந்தது இல்லை. அணி சேராமலும் எந்த முகாமுடனும் நாம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளாமலும் இருப்பதே நமது முந்தைய கொள்கையாகும். மற்ற நாடுகளின் கொள்கைகள் அல்லது சித்தாந்தங்கள் எப்படியிருந்தாலும் நாம் எல்லா நாடுகளுடனும் தோழமையுடன் இருந்தோம். தற்போது நிலைமை வேறுபட்டுள்ளது. நாம் சில நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். அது நமது சுயேச்சைத் தன்மையை கட்டுப் படுத்துகிறது என டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்