போலீஸ் அதிகாரியை அவமதித்துப் பேசியதற்காக பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா நேற்று குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு வெ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் வழி, நாட்டின் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழந்துள்ளார். பி.கே.ஆர். உதவித் தலைவருமான தியான் சுவா அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி யாஸ்மின் அப்துல் ரசாக் கூறினார். அபராதத் தொகை 2,000 வெள்ளிக்கும் மேல் போனதால் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழந்துள்ளார். எனவே, அந்த அபராதத் தொகையைக் குறைப்பதற்கு தாங்கள் மேல்முறையீடு செய்யப்போவ தாக தியென் சுவாவின் வழக்கறிஞர் லத்தீபா கோயா தெரிவித்தார். மூன்றாண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 14-ஆம் தேதி ஏ.சின்னப்பா என்ற போலீஸ் துணை சூப்ரிண்டெண்டனுக்கு எதிராக அவமதிக்கும் வார்த்தைகளை உச்சரித்த காரணத்திற்காக பினல் கோட் பிரிவு 509-இன் கீழ் தியென் சுவா குற்றஞ்சாட்டப்பட்டார். இங்குள்ள அமாண்டா தங்கும் விடுதியில் அவர் அவ்வாறு நடந்து கொண்டார். குற்றஞ்சாட்டபட்டுள்ளவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். ஒரு தலைவர். அவருக்கு ஆதரவாளர்கள் இருக்கின்றனர். அவர் இதுபோன்று மீண்டும் நடந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு கூடுதல் தண்டனை வழங்கும்படி அரசு தரப்பு துணை வழக்கறிஞர் சுஹைமி இப்ராஹிம் தெரிவித்தார். போலீஸ் அதிகாரியை அவமதித்ததாக தியென் சுவா குற்றஞ்சாட்டப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு, 2017 டிசம்பர் 11-ஆம் தேதி நாடாளுமன்ற கட்டட நுழைவாயிலில் போலீஸ் அதிகாரி ரொஸ்யாடி அனுவாரை அவர் அவமதிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.அப்போது, மேல் முறையீட்டின் வழி அவருக்கான அபராதத் தொகை வெ.2,000-மாகக் குறைக்கப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை தள்ளி வைக்கப்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்