img
img

வெளிநாடுகளில் உள்ள வடகொரியர்கள் இணையத்தில் தொடர்பு கொள்ள தடை !
வெள்ளி 10 மார்ச் 2017 14:02:01

img

கிம் ஜோங் நாமின் கொலை குறித்த செய்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் வெளிநாடு களில் உள்ள வடகொரியத் தொழிலாளர்கள் விவேக கைத் தொலைபேசிகளின் மூலம் இணையத்தில் தொடர்பு கொள்ள அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக ரேடியோ ஃபிரீ ஆசியா தகவல் வெளியி ட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாடு களிலுள்ள வடகொரியத் தூத ரகங்களுக்கு அது ஆணையிட்டுள்ளது. அவ்வாணைக்கு கீழ்ப்படிய மறுப்போர் தாயகத் திற்கு அழைக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா, விளாடி வாஸ் டக்கிலுள்ள ஒரு வட்டாரத்தை மேற் கோள்காட்டி ரேடியோ ஃபிரீ ஆசியா கூறியுள்ளது. வெளி நாடுகளிலுள்ள வட கொரியத் தூதரகங்களிலுள்ள அதிகாரிகளுக்கும் இணையத் தொடர்பு வசதி தடை செய்யப்பட்டுள்ளது. வடகொரியத் தலை வர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் கடந்த பிப்ரவரி 13இல் கேஎல்ஐஏ2 இல் நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்யும் தடை செய்யப்பட்ட விஎக்ஸ் ரசாயன நச்சின் மூலம் கொல்லப்பட்டார். மேற்கண்ட ஆணை வெளி யானது முதல் வெளிநாடுகளிலுள்ள வடகொரியத் தொழிலாளர்களின் விவேக கைத்தொலைபேசிகள் அங்கொன்றும் இங் கொன்றுமாக ஆய்வு செய்யப்பட்டதாகவும் அவ்வட்டாரம் கூறியுள்ளது. மேற்கண்ட தடையாணை ஜோங் நாமின் கொலை குறித்த செய்தி வட கொரியா வில் வேகமாக பர வுவது தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img