நேற்று முன்தினம் ஜொகூர் பாரு ஆயர் ஈத்தாம் சாலையின் 77ஆவது கிலோ மீட்டரில் இரு லோரிகள் மோதிக் கொண்ட விபத்தில் இந்திய ஆடவர் மரண மடைந்தார்.இங்கு இதனை தெரிவித்த குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் போலீஸ் உதவி கமிஷனர் முகமட் லாஹாம், பிற்பகல் 3.00 மணியளவில் நிகழ்ந்த அவ்விபத்தை தொடர்ந்து குளுவாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இரவு 8.20 மணியளவில் மாண்டதாக குறிப் பிட்டார். மாண்டவர் கூலாயைச் சேர்ந்த எஸ்.சங்கரன் (வயது 67) என அடையாளம் காணப்பட்டது. சிம்பாங் ரெங்கத்திலிருந்து கம்போங் உலுபெனுட்டை நோக்கி சென்ற லோரி ஒன்று அங்குள்ள பட்டறை ஒன்றுக்கு வளைந்து செல்ல காத்திருந்த வேளையில் ஜொகூர் பாருவிலிருந்து ஆயர் ஈத்தாமை நோக்கி சென்ற மற்றொரு லோரி முன்னால் நின்ற லோரியின் பின்னால் மோதியதைத் தொடர்ந்து இந்த துயரம் நிகழ்ந்ததாக முகமட் லாஹாம் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்