உடும்பு இறைச்சியை சாப்பிட மறுத்ததால் ஆடவர் கத்தி வெட்டுக்கு ஆளாகிய சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் இங்குள்ள பத்து நியா நீண்ட வீடு குடியிருப்பில் நிகழ்ந்துள்ளது. கத்தி வெட்டுக்கு ஆளாகியவரும் தாக்குதலை நடத்தியவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்துள்ளனர். சமைத்த உடும்பு இறைச்சியை சாப்பிடுமாறு 32 வயது ஆடவர் 40 வயது ஆடவரிடம் கூறியுள்ளார். அதனை சாப்பிட்டு பழக்கம் இல்லை என கூறி அவர் அதனை சாப்பிட மறுத்துள்ளார். இதனால் சினம் அடைந்த அந்த நபர் கத்தியால் உடும்பு இறைச்சியை சாப் பிட மறுத்துவரை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு ஆளானவர் அங்குள்ள காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதன் அடிப் படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் தாக்கிய ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பாராங் கத்தியும் பறி முதல் செய்யப்பட்டதாகவும் மிரி மாவட்ட துணை போலீஸ் அதிகாரி ஸ்டென்லி ஜொனாத்தன் ரிங்கிட் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்