மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்ற வட கொரியாவின் அதிரடி நடவடிக்கையினால் அங்கு செய்வதறியாது பரிதவிக்கும் 11 மலே சியர்களில் பி.எஸ்.நிர்மலா மலர் கொடியும் ஒருவர். பேரா, கோலகங்சாரில் உள்ள ஹைலண்ட் பார்க்கைச் சேர்ந்த நிர்மலா மூன்றாண்டுகளுக்கு முன்பு தான் வட கொரியத் தூதரகப் பணியாளராக அங்கு சென்றார் என அவரின் மூத்த சகோதரி கோமளா தேன்மொழி (48) கூறினார். எங்களை கவலைப்பட வேண்டாம் என என் தங்கை நிர்மலா வாட்ஸ் அப் வழியாக எங்களுக்கு ஆறுதல் கூறியிருந்தாலும், அங்கு என்ன நடக்குமோ என்று எண்ணி எங்களால் பயப்படாமல் இருக்க முடியவில்லை. ஆனாலும், அவர் அங்கே பாதுகாப்பாக இருக்கிறார் என்ற விஷயம் ஓரளவிற்கு மன நிம்மதியைக் கொடுக்கிறது என்று அவர் சொன்னார். மலேசியர்கள் தாயகம் திரும்புவதற்கு வட கொரியா தடை விதித்துள்ளது என்பதை கேள்வியுற்றதும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் கவலை யடைந்தோம். செவ்வாய்க்கிழமை இரவு வாட்ஸ் அப் வாயிலாக அவரிடமிருந்து தகவல் கிடைத்த பிறகுதான் எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. வட கொரியா, யொங்பெங்கில் உள்ள மலேசியத் தூதரகத்தின் அனைத்து பணியாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பாதுகாப்புடன் இருப்பதாக செவ்வாய் இரவு நிர்மலா தகவல் அனுப்பியதாக கோமளா குறிப்பிட்டார். ஐவர் அடங்கிய குடும்பத்தில் நிர்மலா மூன்றாவது பிள்ளையாவார். கடந்த 2003, 2005-இல் எங்கள் தாயும் தந்தையும் காலமாகி விட்டார்கள். அதன் பிறகு நாங்கள்தான் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து வருகிறோம். மூன்றாண்டுகளுக்கு முன்பு தூதரகத்தில் பணியாற்றுவதற்காக வட கொரியா சென்ற என் தங்கை, 2015 ஏப்ரல் மாதம் ஒரு மாத விடுமுறையின் போது தாயகம் திரும்பினார். கோலகங்சாரில் எங்களை சந்திக்க வந்திருந்தார். இன்று வரை வட கொரியாவில் நிர்மலாவுடன் எங்களால் தொடர்பு கொள்ள முடிகிறது. அங்குள்ள அனைத்து மலேசியர்களும் கூடிய விரைவில் பாது காப்புடன் தாயகம் திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறோம் என்று கோமளா தேன்மொழி மேலும் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்