சுங்கை பாக்காப்பிலுள்ள தேசிய வகை சீனப் பள்ளி ஆசிரியை எல்.வனிதா (வயது 38)வை அறைந்த டான் சோவ் யென் (வயது 35)னுக்கு நிபோங் திபால் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஷம்ஷோல் அஸ்வா மர்தாட்ஸா 6 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளார். ஆசிரியயை அறைந்த அச்சம்பவம் கடந்த 2.2.2015 இல் நடந்தது. வகுப்பில் மந்தமாக இருப்பதாகக் கூறி தன்னை மலாய் மொழி ஆசிஇரயை கிள்ளியதாக டானின் 10 வயது மகன் கூறியிருக்கிறார். அதையடுத்து தாய்மை உணர்வில் டான் அந்த ஆசிரியயை அறையும் நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு 8-14 வயதில் மூன்று பிள்ளைகள் உள்ளனர். நேற்றைய வழக்கு விசாரணையின்போது டானின் வழக்கறிஞர் முகமட் இஸ்மாயில் முகமட் வாதிட்டுள்ளார். டானின் செயல் நெறியற்றது. விருப்பம் போல் யாரையும் அறையக் கூடாது என சமுதாயத்திற்கு விணிப்புணர்வை ஏற்படுத்த டானை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என அரசாங்க துணை வழக் கறிஞர் அபிஹ் நஸ்ரின் ஸஹாரினான் வாதிட்டார். இந்நிலையில் நேற்றைய தீர்ப்பு தொடர்பில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக டானின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்