பத்து லாப்பான் உலுகிந்தா தாமான் மேவா ஓம்ஸ்ரீ மாக்காட்டு முனீஸ்வரர் காளியம்மன் ஆலய நில விவகாரம் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஆலய நிர்வாகத்திற்கு எந்த ஒரு தகவலும் கூறாமல் நில மேம்பாட்டாளர் இடித்து தரைமட்டமாக்கியது கண்டிக்கத்தக்கது என்று ஆலய நிர்வாக பொறுப்பாளர் திருமதி என்.தேவசுந்தரி கூறினார். இப்பகுதியின் மலையடி வாரத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் சுமார் 50 ஆண்டுகால வரலாற்றை கொண்டுள்ள இந்த ஆலயம் தனி யாருக்கு சொந்தமான நிலத்தில் செயல்பட்டதால் நில மேம்பாட்டாளர் எங்களை வெளியேற்ற நோட்டீஸ் கொடுத்ததைத் தொடர்ந்து நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தீர்ப்பு நில மேம்பாட்டாளருக்கு சாதகமாக அமைந்ததால் தீர்ப்பை ஆட்சேபித்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஆஜ ரான வழக்கறிஞர் ஒருவர் வழக்கிலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மற்றொரு வழக்கறிஞரை நியமித்து அதற்கான ஏற்பாடு செய்துவரும் வேளையில் நேற்று திடீரென பெரிய இயந்திரங்களை கொண்டு வந்து ஆலயத்தின் ஒரு பகுதியை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டனர். இவ்விவகாரம் குறித்து பேரா மந்திரிபுசாரின் ஆலோசகர் டத்தோ இளங்கோ அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டத்தோ இளங் கோவின் செயலாளர் சரவணன் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில்வந்து கோவில் இடிப்பதை தடுத்து நிறுத்தினார். ஒரு வார கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து கோவில் இடிப்பது நிறுத்தப்பட்டது. எனினும் பெரிய ஆஞ்சினேயர் சிலை, விநாயகர் சிலை, ஆலயத்தின் முன் போடப்பட்ட கூடாரம் எல்லாம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஆலயத்தை அப்புறப் படுத்துவதற்கு நீதிமன்றத்தில் ஆணை பெறப்பட்டதாக கூறும் நில மேம்பாட்டாளர் அதனை எங்களிடம் காட்டாதது ஏன்? இதுபற்றி எங்களுக்கு எதுவும் கூறப்படவில்லை என்று கூறினார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மீது மேல் முறையீடு செய்யப்படும் என்று வழக்கறிஞர் சுந்தரராஜன் கூறினார். எங்களுக்கு ஒரு மாற்று இடம் கொடுத்தால் வெளியேற தயாராக உள்ளோம் என்று கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்