ஜொகூர் மாநில சா ஆ கூட்டுத் தமிழ்ப் பள்ளியில் தொடங்கிய தமிழ்க் கல்வியின் பயனாக பட்டதாரியாகும் கனவினை நனவாக்க முடிந்ததாகப் பெருமை யோடு கூறுகின்றார் மின்னல் பண்பலையின் அறிவிப்பாளராக விளங்கும் பிரேமா கிருஷ்ணன். தமிழ்ப் பள்ளியில் ஆறாண்டுகளுக்குப் பின்னர் சா ஆ இடைநிலைப் பள்ளியில் எஸ்பிஎம் தேர்விற்குப் பின்னர் செயின்ட் திரேசா உயர்நிலைப் பள்ளியில் படிவம் 6-இல் படிப்பதற்கு எடுத்த முடிவு தன்னை ஒரு பட்டதாரியாக உயர்த்தியுள்ளதற்கு எஸ்டிபிஎம் தேர்வில் தாம் எடுத்த தமிழ் மொழிப் பாடமே முக்கியக் காரணம் என்பதை விவரமாகக் கூறியுள்ளார் பிரேமா கிருஷ்ணன். எஸ்டிபிஎம் தேர்வினில் சிறப்பு தேர்ச்சியைப் பெற முடிந்ததால் மலேசிய தேசியப் பல்கலைக் கழகத்தில் ஊடகவியல் தொடர்புத் துறையில் (Mass Communication) இளங்கலை படிப்பை முடித்துவிட்டு பயிற்சி மாணவியாக மின்னல் பண்பலையில் பணியாற்றிய வாய்ப்பினை தாம் கற்ற தமிழ் மொழியே வழங்கியதாக பெருமிதத்தோடு கூறினார் பிரேமா கிருஷ்ணன். தனது முதுகலை பட்டத்திற்கான கல்வியை மலாயா பல்கலைக் கழகத்தில் பதிப்புத் துறையில் (Master in Publication) தொடர்ந்து முடித்திருக்கும் இவர், தற்போது படைத்துவரும் ஆசை ஆசையாய் நிகழ்ச்சியின் வழி பலரது ஆசைகளை நிறைவேற்றி வரும் இவரின் தந்தை கிருஷ்ணன், தாயார் திருமதி லெட்சுமியின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு படிவம் 6க்கான கல்வியும் எஸ்டிபிஎம் தேர்வுமே அஸ்திவாரமாக அமைந்ததாகவும் கூறுகின்றார் பிரேமா கிருஷ்ணன். ஜொகூர் சா ஆவில் விவசாயத் துறை வணிகம் செய்து வரும் தந்தையாரின் கணவினை மெய்யாக்கிய பெருமைக்குரிய மகளாய்த் திகழும் பிரேமா கிருஷ்ணன் 2016ஆம் ஆண்டில் எஸ்பிஎம் தேர்வினை எழுதி யிருக்கும் இந்திய மாணவர்கள் படிவம் 6இல் மேற் கல்வியைத் தொடர்வதை முதன்மைத் தேர்வாகக் கொண்டு அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் உள்ள உயர் கல்வி வாய்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். நான்கு பிள்ளைகளில் ஒரே பட்டதாரியாக விளங்கும் பிரேமா கிருஷ்ணன் எஸ்டிபிஎம் தேர்வில் தேர்வுப் பாடமாக அமைந் திருக்கும் தமிழ் மொழிப் பாடம் மிகச் சிறந்த மொழி ஆற்றலையும், சிந்தனை ஆற்றலையும் வளர்த்ததோடு தமிழ் மொழியின் ஆழத்தையும் உணர்த்தியதாகவும் தன்னைப் பட்ட தாரியாக்கி தமிழ் மொழிக்குச் சேவை செய்வதை பாக்கியமாகக் கருதுவதாகவும் கூறியுள்ளார். கல்வி அறிவு மட்டுமே நம்மையும் நமது சமுதாயத்தையும் மாற்றவல்ல சக்தி கொண்டதாகக் கருதும் நிலையில் தற்போதைய இளைய தலைமுறை யினரிடம் கல்வி கற்போம்! வாழ்வில் முன்னேறுவோம்! என்ற சிந்தனையையும் வெளிப்படுத்தினார் பிரேமா கிருஷ்ணன்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்