போலீசில் பொய்ப் புகார் கொடுத்ததாக இரு இந்தியப் பெண்கள் உட்பட ஐவருக்கு நேற்று இங்குள்ள கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 1,000 வெள்ளி முதல் 1,500 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை செனாய் மற்றும் கூலாய் வட்டாரத்தில் தங்களிடம் வழிப்பறித் திருடர்கள் கத்தியைக்காட்டி கொள்ளையிட்டதாக கூலாய், செனாய் போலீஸ் நிலையத்தில் பொய்ப் புகார் கொடுத் ததாக சி.ராஜேஸ் வரி (வயது 27), சி.திலகம் (வயது 32), லம் ஜுன் ஹுவா (வயது 23), அன் ஞாய் பந்திங் (வயது 28), முகமட் இமான் சிக்ரி அப்துல்லா (வயது 20) ஆகிய ஐவர் மீது குற்றஞ்சாட்டப் பட்டது. தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஐவரும் மாஜிஸ்திரேட் அமாட் பாரிட் அமாட் கமால் முன்னிலையில் ஒப்புக் கொண்டனர்.பொய்ப் புகாரை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட சி.ராஜேஸ்வரி மற்றும் சி.திலகம் ஆகிய இருவருக்கு தலா 1500 வெள்ளி அபராதமும், ஜுன் ஹுவா, அன்ஞாய் பந்திங், முகமட் இமான் சிக்ரி ஆகிய மூவருக்கு தலா ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் அமாட் பாரிட் அமாட் கமால் தீர்ப்பளித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்