img
img

மலேசியாவில் பயிலும் ஒவ்வோர் இந்திய மாண வரும் பட்டதாரியாக விளங்க வேண்டும்!
புதன் 08 மார்ச் 2017 14:17:56

img

மலேசியாவில் பயிலும் ஒவ்வோர் இந்திய மாணவரும் பட்டதாரியாக விளங்க வேண்டும் என்ற கனவினை நனவாக்கக் கூடிய வல்லமை படிவம் 6க்கு உள்ளதாகக் கூறுகின்றார் அனைத்துலக வங்கிகளில் ஒன்றான சிட்டி குரூப் வங்கியில் (Citigroup) பணமோசடி எதிர்ப்பு (Anti Money Loundering) நிர்வாகத் துறையில் அதிகாரியாக பணியாற்றும் யோகமலர் பரசுராமன். இந்தியர்களின் நிலக் குடியேற்றத் திட்டமான கெட்கோ நிலக்குடியேற்ற கிராமத்தில் பரசுராமன் தண்டுதை திருமதி சின்னம்மா குட்டப்பன் தம்பதியரின் ஐந்து செல்வங்களில் நான்காவது பிள்ளையான லோகமலர் பரசுராமன் தொடக்கக் கல்வியை பகாவ் ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பெற்ற நிலை யில் இடைநிலைப்பள்ளியை பகாவ் டத்தோ மன்சோர் இடைநிலைப்பள்ளியில் தொடர்ந்து தனது லட்சிய இலக் கான பட்டதாரியாகும் கனவினை மெய்ப்பிக்கும் செயல்பாட்டிற்கு படிவம் 6க்கான கல்வியே துணை என்பதை முழுமையாக உணர்ந்து அதே பள்ளியில் எஸ்.டி.பி.எம். தேர்வினை எழுதியதாக குறிப் பிட்ட வங்கியின் அதிகாரியான லோகமலர் பரசுராமன் தனது இளங்கலை பட்டப் படிப்பினை மலேசிய வட பல்கலைக் கழகத்தில் (Universiti Utara Malaysia - UUM) வங்கித் துறையில் மேற்கொண்டு பட்டதாரியாகியதாகவும் தெரிவித்திருந்தார். தமிழ்ப் பள்ளியிலிருந்து இடை நிலைப் பள்ளிக்குச் செல்லும் போது இருந்த தாழ்வு மனப் பான்மையை படிவம் 6க்கான கல்வி முற்றிலும் அகற்றியதாகத் தெரிவித்துள்ள லோகமலர் பரசுராமன் படிவம் 6க்கான கல்வியின்போது கிடைத்த அனுபவங்கள் தனது தன்னாளு மையை வளர்த்ததாகவும் கூறினார். பல்கலைக் கழக கல்வியின்போது பல்வேறு வகையான கல்வி நடவடிக்கைகளில் சிறந்து விளங்குவதற்கு தனது 6ஆம் படிவக் கல்வியின் அனுபவம் பேருதவியாக இருந்ததன் விளை வால் பிற இன மாணவர்களோடு போட்டியிடும் ஆற்றலும் பல் கலைக் கழகத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியைப் பெற வும் வாய்ப்பளித்ததாகவும் கூறிய அவர், எஸ்பிஎம் தேர்வினை எழுதி முடிவிற்காகக் காத்திருக்கும் இந்திய மாணவர்கள் தயங்காமல் படிவம் 6இல் படிக் கும் வாய்ப்புகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இரப்பர் மரம் வெட்டும் தொழிலாளர்களாக வேலை செய்த பரசுராமன், திருமதி சின்னம்மா தம்பதியர் தங்களின் ஐந்து குழந்தைகளுக்கு சிறந்த கல்வி வாய்ப்பினை ஏற்படுத்தி பட்டதாரிகளை உருவாக்கியிருக்கும் சாதனையில் லோகமலர் பரசுராமனும் அவருடைய தம்பியும் எஸ்டிபிஎம் தேர்வினை எழுதி அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் பயின்றுள்ளதைப் போல மற்ற இந்திய மாணவர்களும் பயனுற வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img