வட கொரியாவிலிருந்து மலேசியர்கள் வெளியேறுவதற்கு அந்நாடு தடைவிதித்து, கிட்டத்தட்ட அவர்களை பிணைபிடித்துள்ள அதே சமயம், பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக தலைநகர் புக்கிட் டாமன்சாராவில் அமைந்துள்ள வட கொரியத் தூதரகக் கட்டடத்தைச் சுற்றி போலீசார் காவலுக்கு நிறுத் தப்பட்டு, அத்தூதரக அதிகாரிகளும் பணியாளர்களும் இங்கிருந்து வெளியேறுவதற்கு மலேசியா தடை விதித்தது. சர்வாதிகாரத்திற்கு பெயர் போன வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட தம்பி கிம் ஜோங் நாம் மலேசியாவில் கொலை செய்யப்பட் டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் கசந்து, உச்சக்கட்டத்தை அடையும் தறுவாயில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அவசரக் கூட்டத்தை நடத்தி அனைத்து மலேசிய பிரஜைகளையும் உடனடியாக விடுவிக்கும் படி வட கொரியா வுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு தரப்பு ராஜ தந்திர உறவுகளும் மோசமான நிலையை அடைவதை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக இந்நடவடிக்கையை எடுக்கும்படி பணித்துள்ள பிரதமர் நஜீப், அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு மலேசியர்களுக்கு தடை விதித்திருக்கும் வட கொரியாவின் நடவடிக்கையைக் கடுமையாகச் சாடி னார். இது ஒரு வெறுக்கத்தக்க செயலாகும். நமது பிரஜைகளை பிணையாளிகளாக பிடித்து வைத்திருப்பது அனைத்துலகச் சட்டம், ராஜதந்திர கோட்பாடு களுக்கு அப்பாற்பட்ட ஒரு செயலாகும். அமைதியை விரும்பும் ஒரு நாடு என்ற வகையில், அனைத்து நாடுகளுடனும் நட்புறவுகளை நிலைநாட்டும் அர்ப்பணிப்பு மலேசியாவிற்கு உள்ளது. இருந் தாலும், எங்கள் பிரஜைகளை பாதுகாக்க வேண்டியது எங்களின் முதல் கடமை. அவர்களுக்கு மிரட்டல் என்று வந்தால் அவர்களை காப்பாற்ற எல்லா நட வடிக்கை களையும் எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம். வட கொரியாவில் உள்ள அனைத்து மலேசியர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப் படும் வரை, இங்கிருந்து ஒரு வட கொரியர் கூட வெளியேறக்கூடாது. அவர்களுக்குத் தடை விதிக்கும்படி போலீஸ் படைத் தலைவருக்கு தாம் பணித் திருப்பதாக பிரதமர் நஜீப் மேலும் கூறினார். இதனிடையே, மலேசியாவில் நிகழ்ந்த கொலைச் சம்பவம் தொடர்பான பிரச்சினைக்கு முறையான தீர்வு காணப்படாத வரையில் அனைத்து மலேசிய பிரஜைகளும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தற்காலிகத் தடை விதிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது என அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தகவல் கூறியது. ஜோங் நாம் கொலை தொடர்பான விசாரணையில் போலீசாருடன் ஒத்துழைக்க மறுத்ததற்காக, வட கொரியத் தூதரான காங் சோல் ஓர் அழையா விருந்தாளி என்று கூறி மலேசியா அவரை நாட்டிலிருந்து வெளியேற்றியது. இரு நாடுகளும் தூதர்களை வெளியேற்றின. காங் சோல் நேற்று முன் தினம் பெய்ஜிங் சென்றார். எனினும், ஜோங் நாம் கொலை தொடர்பில் மலேசியாவில் தேடப்பட்டு வரும் சந்தேகப் பேர்வழிகள் இன்னமும் அத்தூதரகத்தில் இருக்கலாம் என்று மலேசிய போலீசார் நம்புகின்றனர். வட கொரியாவில் தற்போது 11 மலேசியர்கள் இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த 11 பேரில் 9 பேர் யொங்யாங்கில் உள்ள மலேசிய தூதரகத்தில் உள்ளவர்கள் என்றும், எஞ்சிய இருவர் உலக உணவு திட்டத்தைச் சார்ந்த வர்கள் என்றும் விஸ்மா புத்ரா வட்டாரம் தெரிவித்தது. அதே சமயம், மலேசியாவில் சுமார் 1,000 வட கொரியர்கள் தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் கணினி, தயாரிப் புத் துறையிலும், சிலர் கள்ளச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலிருந்து வெளியேற முயற்சிக்கும் வட கொரியர்களை தடுத்து நிறுத்தும்படி குடிநுழைவு இலாகாவின் கண்காணிப்பில் உள்ள அனைத்து சாவடிகளுக்கும் உடனடியாக உத்தரவிடப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சரும் துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். இந்த நடவடிக்கையை எடுப்பதை தவிர மலேசியாவிற்கு வேறு வழியில்லை என்றார் அவர். இரண்டாவது அனைத்துலக விமான நிலையத்தில் நிகழ்ந்த கொலையானது ஒரு சூழ்ச்சி. அதனை நமக்கெதிராக வட கொரியா திருப்பி விட்டுள்ளது. எங்கள் நாட்டுடன் மோதிப் பார்க்க வேண்டாம் என்ற வலுவான, தெளிவான தகவலை வட கொரியாவுக்குச் சொல்ல விரும்புகிறோம் என ஜாஹிட் குறிப்பிட்டார். வட கொரியாவிற்கான மலேசிய தூதரான முகமட் நிஸாம் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதியே மலேசியா திரும்பி விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொலையுண்ட ஜோங் நாமின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று வட கொரியா கோரியுள்ளது. எனினும், முறையான மரபணு சோதனை நடத்தி, அவரின் அடையாளம் உறுதி செய்யப்படும் வரை உடலை ஒப்படைக்க முடியாது என்று மலேசியா மறுத்துள்ளதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வட கொரியாவில் உள்ள அனைத்து மலேசியர்களையும் பாதுகாப்புடன் வெளி யேற்றுவதற்கான நடவடிக்கையில் மலேசிய வெளியுறவு அமைச்சு மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. மேல் விவரங்களை தாங்கள் தற்போது வெளியிட முடியாது என்றும், அங்குள்ள மலேசியர்களின் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவ்வட்டாரம் குறிப்பிட்டது. பத்திரிகை பிரசுர நேரம் வரை மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்