நாட்டின் இறையாண்மையை அவமதிக்க வட கொரியாவை அனுமதிக்க மாட்டோம் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் உள்ளிட்ட மலேசியத் தலைவர்கள் கூறியுள்ளனர். வட கொரிய அதிகாரிகளின் அவமதிக்கும் வகையிலான அறிக்கைகளை கண்டித்த பிரதமர் அவர்கள் மலேசியாவின் இறை யாண்மையை மதிக்க வேண்டும் என்றார். மலேசியா வரும் எவரும் நம்மை மதிக்க வேண்டும். அவர்கள் அடிப்ப டையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் அதற்கு அவர்கள் முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துடன் அவர்களின் அக்கூற்றை திரும்பப் பெற வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாததால் அவர்கள் ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் என அறிவிக்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொண் டோம். மலேசியாவுக்கான வட கொரியத் தூதர் காங் சோல் குறித்து பேசிய பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நாட்டின் கௌரவம், இறையாண்மையை யாரும் அவமதிக்க இயலாது எனப் பிரதமர் நேற்று திங்களன்று நாடாளுமன்ற முகப்பு மண்டப வளாகத்தில் கூறியுள்ளார். கிம் ஜோங் நாம் மரணம் தொடர்பில் தென் கொரியாவுடன் சேர்ந்து மலேசியாவும் சதி செய் கிறது என காங்கும் பியோங் யாங்கும் கூறிய தற்கு பிரதமர் பதிலளித்துள்ளார். காங் பாராட்டத்தக்க மனிதரல்லர், அவர் 48 மணி நேரத்தில் நாட்டைவிட்டு வெளி யேற வேண்டும் என கடந்த 4.3.2017இல் விஸ்மா புத்ரா அறிக்கை வெளியிட்டது. குறைகூறல் தொடர்பில் காங் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வெளி யுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ அனிபா அமான் கூறியுள்ளார். காங்கின் கூற்று மூர்க்கத்தனமானது என பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன் கூறியுள்ளார்.காங்கின் கூற்று இரு நாட்டு நல்லுறவைப் பாதித்துள்ளது என வெளியுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரீஸால் மரிக்கான் நைனா மரிக்கான் கூறியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்