ஆறு மாத கைக்குழந்தையாக இருக்கும்போது தாய், தந்தையை இழந்து, இன்று தனக்கு 77 வயதாகிவிட்ட நிலையிலும் நீல நிற அடையாள அட்டை இல் லாமல், பிறந்த நாட்டிலேயே இரண்டாம் தர பிரஜையாகத் திகழ்கிறார் எஸ்.தங்கம். இவரின் கணவர் ஓர் அரசாங்க அதிகாரி. இவரின் பிள்ளைகளில் மூவர் அரசாங்கத் துறை பணியாளர்கள். தனக்கு நீல நிற அடையாள அட்டை வேண்டும் என்பதற்காக இவர் ஏறி, இறங்காத அலுவலகம் இல்லை, பார்க்காத அதிகாரிகள் இல்லை. ஆனால், இத்தனை ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு இவ ருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவர் பிறந்தது மலேசியாவில். நமது நாட்டின் 60 ஆண்டு கால சுதந்திர வரலாற்றில் இந்த தங்கத்தை போன்று இன்னும் எத்தனையோ மலேசிய தங்கங்கள் குடியுரிமைக்காகப் போராட் டம் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், இப்பிரச்சினைகளை எல்லாம் கவனிப்பது யார்? காஜாங், செராஸ் பெர்டானாவைச் சேர்ந்த தங்கம் தனக்கு நேர்ந்த இந்த துயரம் குறித்து மலேசிய நண்பனிடம் இவ்வாறு விவரித்தார்: நான் 6 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது என் தாயார் மரணமடைந்தார். தந்தையோ ஜப்பானியர்களால் சயாமிற்கு மரண ரயில் பாதை அமைப் பதற்காக வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டார். பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தேன். எனது பிறப்புப்பத்திரம் தொலைந்து போனதால் இன்று வரை சிவப்பு நிற அடையாள அட்டைதான் எனக்கு அடையாளம். நான் பிறந்த மண்ணிலேயே இரண்டாம் தர பிரஜையாக வாழும் சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளேன். என் வாழ் நாளில் ஒரு முறையாவது வாக்களிக்கும் உரிமை எனக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஏங்குகிறேன் என்று கூறுகிறார். தங்கத்தின் பிறந்த தேதி 20.1.1940. இவர் பிறந்த இடம் கோலகுபு பாரு. நீல நிற அடையாள அட்டைக்காக பல முறை விண்ணப்பம் செய்துள்ளார். பிறப்புப் பத்திரம் இல்லாத காரணத்தினால் இவரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இவரின் கணவரும் மரணமடைந்து விட்டார். ஓர் அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றினார். இதன் வாயிலாக தங்கம் தற்போது ஓய்வூதியத் தொகையைப் பெற்று வருகிறார். இவர்களுக்கு 5 பிள்ளைகள். மூவர் அர சாங்கத் துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர் குடும்பத்தில் இவரின் மூத்த சகோதரி ஒருவருக்கு மட்டுமே நீல நிற அடையாள அட்டை உள்ளது. தங்கத்தை பொறுத்த வரையில், நீல நிற அடையாள அட்டையைப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். * கோலகுபு பாரு தேசியப் பதிவு இலாகா; * பெட்டாலிங் ஜெயா தேசியப் பதிவு இலாகா; * ஷா ஆலம் தேசியப் பதிவு இலாகா; * காஜாங் தேசியப் பதிவு இலாகா; * புத்ரா ஜெயா தேசியப் பதிவு இலாகா; * டிரா மலேசியா; * ம.இ.கா. சிறப்புப் பிரிவு; * மை டப்தார் - இப்படி அனைத்து இடங்களிலும் தனது விண்ணப்பத்தை தங்கம் சமர்ப்பித்துள்ளார், எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளார். ஆனால், இன்று வரை ஏமாற்றமே மிஞ்சியது. புத்ரா ஜெயா பதிவு இலாகாவிற்கு நேர்முகப் பேட்டிக்குச் சென்ற இவர், அங்கு அதிகாரிகளின் முன்னிலையில் தேசிய கீதம் கூட பாடி காட்டியுள்ளார். ஆனால் அதுவும் பயனளிக்கவில்லை. என்ன காரணத்திற்காக எனக்கு நீல நிற அடையாள அட்டை வழங்க அரசாங்கம் மறுக்கிறது என்பதை உள்துறை அமைச்சு விளக்க வேண்டும் என்ற கேள்வியை மலேசிய நண்பன் வழி முன் வைத்துள்ளார் தங்கம். ஒவ்வொரு முறையும் பதிவிலாகா செல்லும் போது, விண்ணப்பம் செய்யுங்கள் என்றுதான் அதிகாரிகள் சொல்கிறார்களே தவிர காரணத்தை தெரிவிக்க மறுக்கின்றனர். ஒவ்வொரு முறையும் தபால் முத்திரைக்கென 30 - 40 வெள்ளியை செலவிட நேரிடுகிறது. டிரா மலேசியா, மை டப்தார் வாயிலாக அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்தும் அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை எனக்கு பதில் ஏதும் வரவில்லை. ம.இ.கா. சிறப்பு பணிக்குழுவினரி டமும் ஆவணங்களை தந்துள்ளேன். அங்கிருந்தும் எனக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. ஒரு முறையாவது வாக்களிக்கும் உரிமையை அரசாங்கம் எனக்கு வழங்குமா இது தங்கத்தின் மற்றொரு கேள்வி. அரசாங்கம், ம.இ.கா., டிரா மலேசியா - தங்கத்திற்கு தரப்போகும் பதில் என்ன?
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்