img
img

புக்கிட் ராஜா தோட்ட இடு காட்டு நிலத்தில் அத்துமீறலா?
செவ்வாய் 07 மார்ச் 2017 17:00:48

img

முன்னாள் புக்கிட் ராஜா தோட்ட இடு காட்டு நிலத்தில் ஊன்றப்பட்டிருந்த பெயர்ப்பலகையை முன்னறிவிப்பின்றி அகற்றியதாக நம்பப்படும் சம்பந் தப்பட்ட மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் புக்கிட் ராஜா, பூனியன் தோட்டப் பிரிவு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை பண்டார் புக்கிட் ராஜா காவல் நிலை யத்தில் புகார் செய்தது. இந்தப் புகாரைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் நிகழ்விடத்திற்கு விரைந்த வட கிள்ளான் மாவட்ட காவல் தலைமையகத்தின் குற்றவியல் துறை புலனாய்வு அதிகாரிகள் இடுகாட்டு பெயர்ப் பலகை இடமாற்றப்பட்ட பகுதியை பார்வையிட்டனர். பெயர்ப்பலகை சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள அந்த இடுகாட்டின் மேட்டு பாங்கான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவத்தை கடுமையாக கருதுவதாக ஆலய நிர்வாகக்குழு செயலாளர் மூக்கன் இராமசாமி தெரிவித்தார். எந்த முன்னறிவிப்பும் இன்றி சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் இந்த சம்பவத்தை வட கிள் ளான் மாவட்ட காவல் நிலையத்தார் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்றும் ஆலய நிர்வாகக்குழு அந்தப் புகாரில் வலியுறுத்தியது.அரை நூற்றாண் டுக்கும் பழைமையான புக்கிட் ராஜா தோட்ட இடுகாட்டு நிலத்திற்கு இழப்பீடு கோருவதா அல்லது அந்த இடுகாட்டு நிலத்தை மீட்டெடுத்து நினைவிட பூங் காவாக்குவதா என்று ஆலய நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும் அதற்கு அம்மேம்பாட்டு நிறுவனத்தின் நெடுஞ்சாலை பணிகள் இடையூறாக இருப் பதாகவும் மூக்கன் குறிப்பிட்டார். 1960ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியதாக நம்பப்படும் சம்பந்தப்பட்ட இடுகாட்டை புக்கிட் ராஜா, பூனியன் தோட்டப் பிரிவு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம் தொடக்கக் காலங்களில் பராமரித்து வந்ததாக அறிய வருகிறது.ஏறக்குறைய 4 ஏக்கர் பரப்பளவிலான அந்த இடுகாட்டு நிலம் விவகாரம் குறித்து சம்பந்தபட்ட நெடுஞ்சாலை மேம்பாட்டு நிறுவனத்திடம் ஏற்கெனவே விளக்கம் அளித்திருப்பதாக அவர் கூறினார். புக்கிட் ராஜா தோட்ட மேம்பாட்டுத் திட்டத்தால் 1990ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட இடுகாடு கைவிடப்பட்ட போதிலும் அதை நினைவிடமாக உருவாக்குவதற்கு முன்னாள் பூனியன் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது. புக்கிட் ராஜா வாழைத் தோட்டம் (சுங்கை பிஞ்சாய்), லட்சுமி தோட்டம் (பூனியன் தோட்டம்), என்.இ. தோட்டம் (உள்நாளாங்கட்டை), மெயின் டிவிஷன், செம் பனை ஆலை டிவிஷன், ஆர்பெண்டன் தோட்டம், சுங்கை ராசா டிவிஷன் ஆகியவற்றின் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட இடுகாட்டில் பிரேதங்களை அடக் கம் செய்துள்ளதாக அறிய வருகிறது. சம்பந்தப்பட்ட இடுகாட்டில் 1988ஆம் ஆண்டு வரையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரேதங்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மூக்கன் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img