மிஸ் ஹிட்ஸ் மலேசிய அழகு ராணி போட்டியில் முதல் தகுதி சுற்றில் கோலக் கங்சார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் ஷணாயா சுப்பிர மணியம் வாகை சூடினார். அண்மையில் தலைநகரில் பழைய கிள்ளான் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் நடைபெற்ற மிஸ் ஹிட்ஸ் அழகு ராணி போட்டியில் 50க்கும் மேற்பட்ட இந்திய இளம் பெண்கள் பங்குகொண்டனர். இந்நிலையில் மிஸ் ஹிட்ஸ் மலேசிய அழகு ராணி முதல் தகுதி சுற்றில் 12 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு பெற்றனர். இதில் முதல் நிலை வெற்றியாளராக டாக்டர் ஷணாயா சுப்பிரமணியம் வெற்றி பெற்று வெ.4 ஆயிரம் ரொக்கப் பரிசையும் உல்லாசச் சுற்றுலாவையும் தட்டிச் சென்றார். இரண்டாவது நிலையில் நிஷா மோகனும் மூன்றாம் நிலையில் நளினி தயானந்தன் ஆகியோர் வெற்றிபெற்றனர். இதற்கிடையே இந்திய பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கில் இப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மெக் ஓஷனின் டத்தோஸ்ரீ டாக்டர் பெர்சன் சியா தெரிவித்தார். ஹெரி இண்டர்நேஷனல் டேலன் ஏற்பாட்டிலும் மெக் ஓஷன் ஆதரவிலும் நடைபெற்ற இப்போட்டிகளின் வழி இந்திய பெண்கள் தனித்துவம் மிக்கவர் களாக திகழ முடியும் என கூறிய ஹெரி, இது போன்ற போட்டிகள் வரும் காலங்களில் பிற மாநிலங்களிலும் நடத்தப்படும் என்றார். இதற்கிடையே மலேசியா, சிங்கப்பூர், சீனா, இந்தோனேசியா,அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளில் மேக் மேக் ஓஷன் அமைப்பு தனது தொண்டூழிய பணிகளுடன் வர்த்தகத்தையும் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்