துன் டாக்டர் லிம் சோங் இயூ நெடுஞ்சாலையில் மரத்தை மோதி கார் தீப்பற்றியதால் அதில் பயணித்த 25 வயதுடைய இளைஞர் தீயில் கருகி உயிரி ழந்தார். பினாங்கு பாலத்தின் சாலை சந்திப்பின் அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஓ சுன் குவான் என தீமோர் லாவுட் காவல் துறைத் தலை வர் மியோர் பாரிட் அல் அத்ராஷ் உறுதிப்படுத்தினார். காலை 7.45 மணியளவில் தீயணைப்பு, மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் அதற்குள் கார் தீப்பற்றி அந்த இளைஞரும் கருகி மாண்டுவிட்டார் என அவர் கூறினார். அந்த இளைஞர் புரோத்தோன் சாகா காரை ஓட்டி வந்ததாகவும், வேக கட்டுப்பாட்டை இழந்ததால் மரத்தில் மோதி தீப்பற்றியிருக்கக் கூடும் என்றார். விபத்தில் மாண்ட சுன் குவானின் உடல் பினாங்கு பொதுமருத்துவமனைக்கு சவப் பரி சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்