பயங்கரவாத கும்பல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஏழு ஆடவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர்.பிப்ரவரி 21லிருந்து 26ஆம் தேதிவரையில் சிலாங்கூர் சுற்றுப்புறம், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட நட வடிக்கையின்போது இவர்கள் கைதாகினர். கைதாகிய சந்தேக பேர்வழிகள் 28க்கும் 41 வயதிற்கும் இடைப்பட்டவர்கள். தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவர் உள்நாட்டு பிரஜை. ஒருவர் இந்தோனேசியர். இன்னொருவர் கிழக்காசிய பிரஜை. மற்ற நால்வர் ஏமன் நாட்டு பிரஜைகள். டாய்ஸ் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் உள்நாட்டவர் ஒருவர், இந்தோனேசிய பிரஜை ஒருவர் கடந்த பிப்ரவரி 21இல் கெப்போங்கில் கைதாகியதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ காலிட் அபு பக்கார் தெரிவித் தார். கிழக்காசியாவைச் சேர்ந்த பிரஜையான மூன்றாவது சந்தேகப்பேர்வழி கடந்த பிப்ரவரி 23இல் பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டார். ஏமன் நாட்டு பிரஜையான நான்கு சந்தேகப் பேர்வழிகள் கடந்த பிப்ரவரி 26இல் செர்டாங் கிலும் சைபர் ஜெயாவிலும் கைது செய்யப்பட்டனர். ஏமன் நாட்டு புரட்சிக் கும்பலைச் சேர்ந்த வர்கள் இவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றனர் என்று டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்