நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தலில் 60 விழுக்காட்டு புதுமுகங்களை வேட்பாளர்களாக நிறுத்தப்போவதாக ம.இ.கா. அறிவித்துள்ளது. புதுமுகங்களில் இளைஞர்கள், மகளிர் பிரதிநிதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளும் அடங்குவர் என்று கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறுகிறார். அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதிப் படுத்துவதற்காக தாங்கள் இந்த மாற் றங்களை செய்திருப் பதாகவும், குறிப்பாக கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர் மாநிலங்களில் இந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஆயர் குரோவில் ம.இ.கா. தாமான் முசாபார் ஷா ஏற்பாடு செய்திருந்த கல்வி, சமூகத் திட்டம் ஒன்றை தொடக்கி வைத்தப் பிறகு அவர் நிருபர்களிடம் பேசினார். புக்கிட் கட்டில் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அலி ருஸ்தாம், ம.இ.கா. மாநில தலைவர் டத்தோ எம்.எஸ். மகாதேவன் ஆகியோரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்