நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பகாவ் நகருக்கு அருகே அமைந்திருக்கும் செயின்ட் ஹீலியர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பத்மா இராஜன், பகாவ் டத்தோ மன்சூர் இடைநிலைப்பள்ளியில் படிவம் 6இல் உயர்கல்வியைப் பெற்றதால் இன்று ஒரு வழக்கறிஞராக உயர்ந்து நிற் கின்றார் என்பதை எஸ்பிஎம் தேர்வினை எழுதியிருக்கும் இந்திய மாணவர்கள் ஓர் உதாரணமாகக் கொள்ள வேண்டும் எனப் பணிவோடு கேட்டுக் கொள் கின்றார். இளம் வயதிலேயே தவிர்க்க முடியாத குடும்பச் சூழல்களினால் பெறோர்களை விட்டுப் பிரிந்து தனது பெரியம்மா திருமதி யண்கியம்மாள் அரவணைப் பில் வளர்ந்தவரான பத்மா இராஜன் தனது பெரியம்மாவின் தியாகங்களுக்கு ஏற்ற விலைமதிப்பில்லா பரிசினை வழங்க வேண்டும் என்ற உந்து சக்தியே தன்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக அமைந்திருந்த நிலையில் தன்னுடைய எஸ்பிஎம் தேர்விற்குப் பிறகு கடனில்லாத கல்வியைப் பெற வேண்டும் எனும் ஒரே காரணத்திற்காக எஸ்டிபிஎம் தேர்வினை எழுதுவதற்கு ஏற்றவாறு படிவம் 6இல் கல்வியைத் தொடர்ந்த சூழலில் எஸ்டிபிஎம் தேர்வில் மிகச் சிறந்த முடிவுகளைப் பெற்று அரசாங்கத்தின் பொதுச்சேவை உபகாரச் சம்பளத்தின் வழி தேசிய பல்கலைக்கழகத்தில் (UKM) சட்டத்துறையில் இளங் கலைப் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் வாய்ப்பின் வழி இன்று ஒரு வழக்கறிஞராக வாழ்வில் நிமிர்ந்து நிற்பதாக பத்மா இராஜன் பெருமிதத்தோடு குறிப்பிட்டார். கோலாலம்பூரில் தற்போது தனது வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு வரும் பத்மா இராஜனின் லட்சியப் பயணத்தின் தொடர்ச்சியாக வழக்கறிஞர் துறையில் முதுகலைக் கல்வியையும் தொடர்ந்து வருகின்றார். தனது வாழ்க்கையின் லட்சியத்தினை எட்டிப் பிடிப்பதற்கு ஏணியாக விளங்கியது படிவம் 6இல் கிடைக்கப்பெற்ற கல்வியும் அனுபவங்களுமே என உறுதியாகக் கூறினார் வழக்கறிஞர் பத்மா இராஜன். பகாவ் பகுதியில் பால்மரம் வெட்டும் தொழில் செய்து தன்னை வளர்த்த பெரியம்மா திருமதி யண்கியம்மாளின் அர்ப்பணிப்பிற்கு கடனில்லாத கல்வியின் வழி உயர்நிலையை எட்டிப் பிடித்திருக்கும் பத்மா இராஜனின் முயற்சியை உயர்கல்வியைத் தொடங்கவிருக்கும் அனைத்து இந்திய மாணவர்களும் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்