img
img

சுங்கை சிப்புட் நில விவகாரம் எனக்குத் தெரியாது!
ஞாயிறு 05 மார்ச் 2017 14:35:18

img

சுங்கை சிப்புட் டோவன் பி தோட்ட 101 ஏக்கர் நில விவகாரம் குறித்து பத்திரிகையில் செய்தி வந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன் என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் நேற்று அவரது சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும் இந்த நிலம் குறித்து டோவன் பி தோட்ட மக்களுக்கும் தெரியவில்லை. 2005 ஆம் ஆண்டு தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் தனது நிலத்தை டத்தோ ஸ்ரீ சாமிவேலுக்கு அடிமட்ட விலையில் விற்பனை செய்த காலகட்டத்தில் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை என்றும் அவர் விளக்கினார். மேலும், டத்தோஸ்ரீ சாமிவேலு மூன்றாம் தரப்பினருக்கு அந்த நிலத்தை விற்றுள்ள விவரமும் எனக்குத் தெரியாது. ஏனெனில் வாங்குபவரும் விற்பவரும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சொல்லி விட்டு செய்ய வேண் டும் என்பது கட்டாயமில்லை. இங்கு வீடற்ற நிலையில் உள்ள 130 குடும்பங்களுக்கு மலிவு வீடுகள் கேட்டு கடந்த அக்டோபர் மாதம் பேரா மாநில அரசு செயலகத்தில் மனுக்கள் வழங்கியுள்ளோம். கூட்டுறவு சங்கத்தின் நிலவிவகாரம் முன்பே தெரிந் திருந்தால் சம்பந்தப்பட்ட தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி நிலம் பெறுவதற்கு முயற்சியில் இறங்கி இருப் பேன் என்று டாக்டர் ஜெயக்குமார் கூறினார். மலேசிய நண்பனின் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் குறைந்த விலையில் நிலம் ஏன் விற்கப்பட்டது? என்ன நோக்கத்திற்காக விற்கப்பட்டது? விற்கும் போது வேறு ஏதாவது விதிமுறைகள் வகுக்கப்பட்டனவா? என்பதை கூட்டுறவுக் கழக நிர்வாகம் தனது உறுப்பினர்களுக்கு விளக்கம் தர வேண்டிய கடப்பாட்டில் உள்ளது. 101 ஏக்கர் நிலத்தில் சுமார் 1200 மலிவு வீடுகள் கட்டலாம். இங்குள்ள வசதி குறைந்த மக்களுக்கு அது பெரும் நன்மையை வழங்கி இருக்கும் என்றும் டாக்டர் ஜெயக்குமார் கூறினார். மேலும் இந்த நில விவகாரத்தில் மலேசிய நண்பன் ஏன் இணைத்து பேசுகிறது என்றும் தெரியவில்லை. தவிர மலேசிய நண்பன் என்னுடன் தொடர்பு கொண்ட போது நானும் கைத்தொலைபேசியை வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டதாக எனது மனைவி கூறியதால் செய்தியும் எனக்கு வியப்பைத் தருகிறது. நான் எங்கு சென்றாலும் கைத்தொலைபேசியை உடன் எடுத்துச் செல்லத் தவறியதில்லை என்றும் டாக்டர் ஜெயகுமார் தெரிவித்தார். இந்த நில விவகாரம் ஒரு பொய்யான தகவல் என்றால் டத்தோ ஸ்ரீ சாமிவேலு மலேசிய நண்பன்" மன்னிப்புக் கேட்ட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத் தில் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கமும் இவ்விவகாரத்தில் முழுமையான தகவல்களை வெளியிட வேண் டும் என்றும் டாக்டர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img