சிட்டி பல்கலைக்கழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களின் தொடரில் கலந்துகொண்ட உயர் கல்வித்துறை துணையமைச்சர் டத்தோ டாக்டர் மேரி யாப் மாணவர்களின் முன்னிலை யில் தன்முனைப்பு உரையாற்றினார். வர்த்தகம் உட்பட பல துறைகளில் சாதனைப் படைத்தவர்களை அழைத்து அவர்களை மாணவர்கள் முன்னி லையில் உரையாற்ற வைக்கவேண்டும் என்ற நோக்கில் தான் இப்பேச்சாளர் தொடரை சிட்டி பல்கலைக் கழகத்தினர் அறிமுகம் செய்தனர். கடந்த 2015ஆம் ஆண்டுமுதல் நடைபெற்று வரும் இத்தொடரில் பல தலைவர்கள் கலந்துகொண்டு மாணவர் கள் முன்னிலையில் உரையாற்றியுள்ளனர். இத்தலைவர்களின் உரை மாணவர்கள் மத்தியில் புதிய உத் வேகத்தை கொண்டுவரு வதுடன், மாணவர்கள் மத்தியில் புதிய தன்னம்பிக்கையை ஊட்டு கிறது. அதே வேளையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடம் மாணவர்களுக்கு நெருங்கிய உறவை ஏற்படுத்துகிறது. இது அவர்களின் வாழ்க்கைக்கு மிக பயனாக அமைகிறது என்று சிட்டி பல்கலைக்கழகத்தின் உதவி வேந்தர் பேராசிரியர் டாக்டர் நோரிடா இப்ராஹிம் கூறினார். மிகச் சிறந்த பேச்சாளர் தொடரின் 8ஆவது நிகழ்வில் உயர் கல்வித்துறை துணையமைச்சர் டத்தோ டாக்டர் மேரி யாப் கலந்துகொண்டு உரை யாற்றினார். ‘செயல்முறையில் தலைமைத் துவம்’ எனும் தலைப்பில் துணை யமைச்சர் உரையாற்றியதுடன் மாணவர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை கொண்டு வந்தார். மாணவர்கள் மத்தியில் தலைமைத்துவ கொள்கை மிகவும் முக்கியம். எந்தவொரு பிரச்சினை களையும் மாணவர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு அதில் வெற்றிபெற வேண்டும். தலைமைத்துவமே ஒரு மாணவரின் வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமாக உள்ளது. அதை மாணவர்கள் உணர்ந்து தங்களின் வாழ்க் கையில் வெற்றி பெற வேண்டும் என்று துணையமைச்சர் கேட்டுக் கொண்டார். இதனிடையே சிட்டி பல் கலைக்கழகம் 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். மிகச் சிறந்த கல்வி திட்டங் களின் மூலம் முன்னணி தனி யார் பல்கலைக்கழங்களில் சிட்டியும் ஒன்றாக விளங்குகிறது. அடிப்படை அறி வியல் கல்வித் திட்டங்கள், கேம்பரட்ஜ் ஏ-லெவல், டிப்ளோமா, இளங் கலை, மாஸ்டர், முதுகலை உட்பட பல கல்வி திட்டங்களை சிட்டி பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்