டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 400க்கும் மேற்பட்ட மலேசிய மாணவர்களுக்கு திவெட் டிப்ளோமா திறன்கல்வியின்வழி துல்லிய பொறியியல், விநியோக, சில்லறை மேலாண்மை போன்ற துறைகளில் வேலை உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.
கடந்த 14ஆம் தேதி அம்பாங் டி பல்மா தங்குவிடுதியில் மேற்கொண்ட இந்நிகழ்வுக்கு மலேசிய புறநகர் மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் சிவராசா சிறப்பு வருகை புரிந்திருந்தார். அவர் தனது உரையில் இக்கல்லூரியின் கல்வி முறை, அது வடிவமைத்திருக்கும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சித்திட்டம் மாணவர்களுக்கு வேலை உத்தரவாதத்தைத் தரும் வண்ணம் அமைந்திருப்பதைப் பாராட்டினார்.
இக்கல்லூரியின் தனிச் சிறப்பான கல்வி மாதிரி சம்பந்தப்பட்ட கல்லூரி கடந்த 17 ஆண்டுகளில் 5,000த்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெற்றிகரமாக வேலை உத்தரவாதத்தைப் பெற உதவியுள்ளது. அத்திட்டத்தின் வேலை அம்சம் மாணவர்கள் கல்வி பயிலும் போதே மாதாந்திர அலவன்ஸ் பெறவும் அனுமதிக்கிறது. அம்மாதிரியை இதர நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்றார் சிவராசா.
வெறும் எஸ்பிஎம் தேர்வு ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடாது. கல்வி என்பது தொழில்துறையை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்; அதன் வெற்றியை நிரூபிக்க தொழில் உத்தரவாதம் தரப்பட வேண்டும் எனும் அடிப்படை நோக்கில் துவங்கப்பட்டதுதான் இக்கல்லூரி என்று அதன் நிறுவனர் மற்றும் இயக்குநர் ராஜேஸ்வரி ராமானுஜம் சோமு தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்