பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சுங்கை பாரி ஆண்கள் இடை நிலைப்பள்ளியில் மயில்வண்ணன் புவனபாலன் 9 ஏ பெற்றுள்ளார். இப்பள்ளியின் லோகன் ராஜ் சுகுமாறன் 7 ஏ பெற்றுள்ள வேளையில் மேலும் பலர் சிறந்த புள்ளிகளை பெற்றுள்ளனர்.
ஈப்போ கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியில் இந்தத் தேர்வை எழுதிய பவதாரணி மஹா ராஜேந்திரன் 8 ஏ பெற்றார்.
இவர் தனது தொடக்க கல்வியை ஈப்போ செயின்ட் பிலோமினா தமிழ்ப்பள்ளியில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் என்டர்சன் இடை நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் லினேஷ் டோசன் 8 ஏ, 1 பி பெற்றுள்ளார். ஈப்போ தர்சிசியன் இடை நிலைப்பள்ளியைச் சேர்ந்த டர்வினா விஜயகுமார் 8 ஏ பெற்றார்.
பத்துகாஜா சுல்தான் யூசோப் பள்ளியைச் சேர்ந்த லிவன்ராஜ் வடிவேலு 7 ஏ, சங்கர் நாயுடு ராமநாயுடு 5ஏ, 2 பி, 1 சி எனப் பெற்றுள்ளனர்.
பேரா மாநிலத்தில் 95 விழுக்காடு இந்திய மாணவிகள் பயிலக் கூடிய இடை நிலைப்பள்ளியாக விளங்கும் சுங்கை பாரி ஸ்ரீ புத்ரி இடை நிலைப்பள்ளியில் பெரும்பாலான மாணவிகள் சிறந்த மதிப் பெண்களைப் பெற்றுள்ளனர்.
அதில் எஸ். ஜெசிலின் 7ஏ, எஸ் . கனகவர்ஷினி 6ஏ, த. கஷ்வினி 5ஏ, ஆர். தாரணிராவ் 5 ஏ ,ஆகியோர் சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ள வேளையில் மேலும் பல மாணவிகள் சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்று அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார்.
ஆய்வுகளின்படி இந்த ஆண்டும் இந்தத் தேர்வில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்று ஈப்போ ஆசிரியர் கல்லூரியின் தமிழ்ப் பிரிவுத் தலைவர் முனைவர் சேகர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
அடுத்து இந்த மாணவர்கள் எஸ். பி. எம் தேர்வுக்கு தங்களை தயார்படுத்தவேண்டியுள்ளது. அதில் இந்திய மாணவர்கள் அவசியம் தமிழ் மொழி மற்றும் இலக்கிய பாடத் தேர்வை எழுதவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்