தன்னம்பிக்கை உடையவன் பிரச்சினைகளில் வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பான் தன்னம்பிக்கை அற்றவன் வாய்ப்புகளிலும் பிரச்சினைகளைக் கண்டு பிடிப்பான் எனக் கூறுகின்றார் தமிழர்களின் பங்குச் சந்தை சாதனையாளர் பி.ஆர்.சுந்தர். தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய வெற்றிக்கு பாதை அமைப்பதாகக் கூறுகின்றார். சிலாங்கூர், பந்திங் காடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இரவுச் சந்தை வர்த்தகர் மோகன் எம்.ஜோசப், பல காலமாக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அவர், தனது மனதில் பெரும் குறையாக இருந்து வந்த வர்த்தக எண்ணத்தை நிஜமாக்க செர்டாங் பகுதியில் இரவுச் சந்தைகளில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகத் திருப்தியோடு கூறுகின்றார்.
தன்னைப் போலவே தன் மனைவி சகுந்தலா எம்.முருகேசன், கெடா சுங்கைப்பட்டாணி ஆறுமுகம் பிள்ளை தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர் எனக் கூறிய வணிகர் மோகன் எம்.ஜோசப், தாங்கள் பெற்ற இன்பத்தை தங்களின் ஆறு பிள்ளைகளும் பெற வேண்டும் என உறுதியாக இருந்து அனைவரையும் தமிழ்ப்பள்ளிகளில் தொடக்கக் கல்வியைப் பெறும் வாய்ப்பினைத் தந்ததாகக் கூறுகின்றார்.
காலங்கடந்து போனாலும் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கை நிறைவேறி இருப்பதாகக் கூறும் இவரின் ஆறு செல்வங்களான மதனன் மோகன், குகன் மோகன், மணிவேல் மோகன், வனிதா மோகன், ஹேமராணி மோகன், நவீன் ராஜ் மோகன் ஆகியோரை செர்டாங் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கும் வாய்ப்பை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்