வர்த்தகத்தில் தோல்விகளைக் கண்டு அஞ்சக்கூடாது. தோல்விகளிலிருந்துதான் மிகப் பெரிய வளர்ச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனும் டீ ஹோக் (Dee Hock) என்பவரின் வைர வரிகள் பொதுவாகவே எல்லா வர்த்தகர்களுக்கும் பொருந்தும் எனக் கூறுகின்றார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரேட் விஷன் இலக்ட்ரிகல் என்ஜினியரிங் (Great Vision Electrical Engineering) எனும் நிறுவனத்தை வழிநடத்தி வரும் வர்த்தகர் வீரமணி பெருமாள்.
சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்திருக்கும் பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் இவர் ஆவார். சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தை மூலதனமாகக் கொண்டு சேமித்து வைத்த தொகையின் வழி தற்போது வெற்றி பெற்ற வர்த்தகராக வலம் வருகின்றார், மின்சாரம் மின்னியல் வர்த்தகத்துறைகளில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயம் ஆகும் என்கிறார்.
மின்சார இணைப்புகளுக்கான சேவைகளை வழங்கி வரும் இவருக்கு நாணயமும் நியாயமான விலையும் திருப்திகரமான சேவையும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுவது மட்டுமே வெற்றியின் இரகசியம் என்கிறார். வர்த்தகத் துறைகளில் ஈடுபடுவோருக்கு உறுதுணையாக மனைவியும் குடும்பமும் இருக்க வேண்டும் எனக் கூறும் வர்த்தகர் வீரமணி பெருமாள் தனது துணைவி ருக்குமணி வீரபத்திரனின் அர்ப்பணிப்பு தனது வெற்றிக்குப் பாலமாக இருப்பதாகக் கூறுகின்றார்.
தமிழ்ப்பள்ளியில் படிக்கும் காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களே தன்னை வர்த்தகராக உயர்த்தியிருப்பதாகக் கூறும் இவர் புதிய தலைமுறையினர் தயக்கம் காட்டாமல் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கே அனுப்பி வைக்கும் சமூக கடப்பாட்டைக் கொண்டுள்ளதாகக் கூறுகின்றார். தனது மனைவி ருக்குமணி வீரபத்திரனும் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் படித்திருப்பதாகத் தெரிவித்த வீரமணி பெருமாள் தனது செல்வங்களான கோகிலவாணி வீரமணி, கிரிஜா வீரமணி ஆகியோருக்கும் அதே வாய்ப்பினை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகளில் படித்தவர்கள் வர்த்தகத் துறைகளில் ஈடுபடுவதற்குக் கூடுதல் வாய்ப்பு பிரகாசமாகவே இருப்பதாகக் கூறும் இவர் மலேசிய இந்திய சமூகம் இந்திய வர்த்தகர்களுக்கு வாய்ப்பினை வழங்குவதில் தயக்கமே காட்டக்கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்