வாய்ப்புகளைத் தேடி அலைவதைவிட வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதில் மாணவர்கள் முனைப்பு காட்ட வேண்டும் என அமரர் ஏபிஜே அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர், வீ.பொன் ராஜ் அண்மையில் நடைபெற்ற 'தலைமைத்துவம், நாட்டுப்பற்று மற்றும் வர்த்தகம்' எனும் தலைப் பிலான பயிற்சிப் பட்டறையின் போது வலியுறுத்தினார். 500 இந்திய இளைஞர்களுக்காக இரண்டு நாள் இந்த இலவச பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. இளைஞர்களின் கனவு நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ஒரே கோட்பாடுகளின் அடிப்படையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான இப்பயிற்சிப் பட்டறை கடந்த பிப்ரவரி 18,19 (2017) ஆகிய தேதிகளில் மலாயா பல்கலைக் கழகத்தில் நடந்தேறியது. கடந்த 1.11.2015-இல் நடை பெற்ற, அமரர் அப்துல் கலாமின் தபால் தலை வெளியீட்டு விழாவில் பேரா இந்தியர் வர்த்தக சபையும் அப்துல் கலாம் இலட் சிய இந்திய இயக்கமும் இணை ந்து கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முயற்சியா கவே இப்பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. இந் நிகழ்வின்போது, மாணவர்கள், இளைஞர்களிடையே விதைக்கப்பட்டுள்ள கலாமின் சிந்தனைகள் இந்தியா பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியடைய உதவியாக இருக்கும் என்று பொன்ராஜ் கூறினார். வேலை வாய்ப்பே இல்லாத ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துப் பயின்று இன்று அந்த துறையை இந்திய நாட்டின் வளர்ச்சியில் பங்குபெற செய்தவர் ஏபிஜே அப்துல் கலாம். அதேபோன்று இன்றைய இளம் தலைமுறை யினரான மாணவர்களும் வாய்ப்பு களைத் தேடிக் கொண்டிருப் பதைவிட வாய்ப் புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நமக்குள் தேடலை விதைக்க வேண்டும். அதுதான் நமது வெற்றியை நிர்ணயிக்கும் அடித்தளமாகும் என முதன் மையுரையில் பேரா இந்தியர் வர்த்தக சபைத் தலைவர் திரு.கேசவன் வலியுறுத்தினார். நம்பிக்கைக்கு வித்திடும் டிக்சன் செயல்முறை என்னும் உணர்வுப்பூர்வமான நீண்ட நேர பயிற்சியை வித்யாஷங்கர் நடத்தினார். தொடர்ந்து, கடந்த காலம் எதிர்காலத்துக்கு சமமானதல்ல. கடந்த கால நிகழ்வுகள் நமது எதிர் காலத்தை தீர்மானிக்க முடியாது என்பதை விளக்கக்கூடிய பயிற்சி யளிக்கப் பட்டது. வித்யாஷங்கர் நடத்திய முழு அமர்வும் தெளிவாகவும் 100% பங்களிப் புடனும் பார்வையாளர்கள் அனை வருக்கும் மிகத் தேவையான முறை யில் நடைபெற்றது. இந்திய சமுதாயத்தினர் கல்வி யால் மட்டுமே முன்னேற்றம் காண முடியும் என்பதால் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தித் தங்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என பிரதமர் துறை அமைச்சகத்தின் துணை அமைச்சரும் மஇகாவின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி சிறப்புரையில் வலியுறுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்