போலீஸ் தடுப்புக்காவல் நிலையங்களில் கைதிகளின் மரணம்,துன்புறுத்தல் தொடர் பான சர்ச்சைகளுக்கு இன் னும் தீர்வு கிடைக்காத நிலையில், புக்கிட் மெர்தாஜம் காவல் நிலை யத்தில் மற்றொரு கைதி துன்புறுத்தப் பட்ட சம்பவம் வெளிச்ச த்திற்கு வந்துள்ளது. புக்கிட் மெர்தாஜம் மத்திய மாவட்ட காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 16,17 ஆகிய தேதிகளில் தான் தடுப்பு காவலில் இருந்தபோது, இரு காவல் அதிகாரிகள் தன்னை கடுமையா கத்தாக்கி காயம் விளைவித்ததாகவும், மின்சாரம் பயன்படுத்தி ‘ஷாக்’ கொடுத்து துன்புறுத்தியதாகவும் நாகராஜன் த/பெ சந்திரன் (40) நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்விவ ரங்களை வெளியிட்டார். புக்கிட் மெர்தாஜம் பண்டார் பெர்டாவில் அமைந்துள்ள மாவ ட்ட காவல் நிலையத்தின் முதல் மாடியில் குற்றச்செயல் தடுப்பு துறையைச் சேர்ந்த இரு அதிகாரி கள் தன்னைத் தாக்கியதாக அவர் சொன்னார். காவலர்களின் தாக்குதலி னால் தனது வலது கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளதுடன், உடலில் பல இடங்களில் குறிப்பாக, தனது மர்ம பாகத்தில் மின்சார ‘ஷாக்’ கொடுத்ததில் தாங்க முடியாத வலியால் அவதியுற்று வரு வதாக அவர் மேலும் விவரித்தார். இதனிடையே இந்த செய்தியாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்த பத்துகவான் ஜனநாயக செயல்கட்சியின் செய லாளர் டேவிட் மார்ஷல் குறிப்பிடு கையில், நாகராஜா கடுமையாக துன்புறுத்தபட்டுள்ளது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது என்றும், தடுப்பு காவல் கைதிகளை மின்சாரம் கொண்டு ‘ஷாக்’ கொடுப்பது, காவல் துறை விசாரணையில் அனு மதிக்கப்பட்ட ஒன்றா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காவல் நிலையத்தில் கைதிகள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். நாகராஜா விஷயத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலி யுறுத்தினார். இச்சம்பவம் தொடர்பில் மாநில காவல் துறை தலைவர் டத்தோ ஜி லாய் சுவாவிற்கு பி.இராம சாமி மனு அனுப்பியுள்ளார்
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்