img
img

மலேசிய இந்தியர்கள் அரசியல் உரிமையை இழக்கலாமா?
ஞாயிறு 05 மார்ச் 2017 13:22:31

img

மலேசிய இந்தியர்களிடையே காணப்படும் அலட்சியப் போக்கும், சமூகத்தைப் பற்றிய அக்கறை யின்மையும், எதற்கெடுத்தாலும் அடுத்தவரின் தலை யீடுகளுக்காகக் காத்திருக்கும் போக்கும், அரசாங்கம் எதையுமே செய்யவில்லை என்ற எதிர்மறை போக்கும் 60 ஆண்டு கால சுதந்திரத்திற்குப் பின்னரும் சமூகப் பொருளாதார பின்னடைவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இனமாக நாம் பரிமாணம் பெற்றுள்ளதற்கு அடிப்படைக் காரணங்களாக ஏவு கணை பட்டியலிடுகின்றது! மலேசிய இந்திய சமூகத்தி னரைப் போல் அரசியல் பேசும் சமூகம் இந்த நாட்டிலேயே இல்லை எனலாம். கடுகு சிறுத் தாலும் காரம் போகாது என்பார் கள். ஆனால், நாம் சிறு சமூகத் திற்கு 15ற்கும் குறையாத அரசி யல் கட்சிகள் என்பதை எண்ணும் போதுதான் வேதனையே ஏற்படு கின்றது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அரசியலில் நாம் 15 ஆகவும் அதற்கும் மேலாகவும் பிரிந்து கிடந்து நம்மை பிரித்த வர்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றோமே இதையாவது 60 ஆண்டுகளில் உணர்ந்துள்ளோமா? எனக் கேட்டால் நிச்சயம் பதில் எதிர்மறையானதாகத் தான் இருக்கும். அரசியலில் இந்திய சமூகத் தால் ஒன்றுபட முடியாது என் பதை 60 ஆண்டுகளாக ஏவு கணை பார்த்து வருகின்ற நிலை யில் 21 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து இந்தியர் களும் வாக்காளர்களாக பதிவு செய்துள் ளோமா என்ற கேள்விக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் சுமார் 4 லட்சம் தகுதி பெற்ற மலேசிய இந்தியர்கள் வாக்காள ர்களாக இன்னமும் பதியவில்லை என்பது இந்திய சமூகத்திற்கு விதித்துக் கொள்ளும் அரசியல் ஆயுள் தண்டனையாகவே ஏவு கணை கருதுகின்றது! வாக்காளர் உரிமையைஇழக்கலாமா? மலேசியாவில் 21 வயதிற்கும் மேற்பட்ட மலேசிய இந்தி யர்க ளில் 1.1.2016ஆம் நாளில் மலே சிய தேர்வு ஆணையம் (Suruhanjaya Pilihan Raya-SPR) வெளியிட் டிருந்த பதிவு பெறாத வாக்காளர்களின் இன ரீதி யிலான எண்ணிக்கையின் வழி இன்னமும் 378,931 பேர் வாக் காளர் களாகப் பதிவு பெறாத தகவல்கள் இடம்பெற்றுள்ளது மலேசிய இந்தியர்களின் ஒட்டு மொத்த அரசியல் உரிமையையும் இழக்கச் செய்வதற்கான செயலாகவே ஏவுகணை கருதுகின்றது! வாக்கு பலமே சமூகத்தின் பலம் என்பதை 60 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பின்னரும் அறியாத சமூகமா? இந்திய சமூகம்! மேற்கண்ட எண்ணிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிச்சய மாக 400,000ஐ எட்டியிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. * என்னுடைய ஒரு வாக்கு தான் நாட்டைக் காப்பாற்றுமா? * நான் வாக்களிக்காவிட்டால் ஜெயிக்கும் வேட்பாளர் தோற்றுவிடுவாரா? * நான் வாக்காளராக இருந்தால் என்ன கிடைக்கும்? * வாக்களிப்பதற்குப் பதிலாக வேறு வேலை செய்யலாம் அல்லவா? * எனக்கு யாரையுமே பிடிக்க வில்லை. ஏன் வாக்களிக்க வேண்டும். * அரசியலே எனக்கு வேண்டாம். என்னை விட்டு விடுங்கள். * வாக்காளர்களாகப் பதிவதற்கு நேரமா இருக்கின்றது? * 13 பொதுத் தேர்தல்களில் வாக்களித்துவிட்ட இந்திய சமூகம் மாறிவிட்டதா? * அரசியல்வாதிகள் தங்களை உயர்த்திக் கொள்ள நான் ஏன் வாக்களிக்க வேண்டும்? * நான் வாக்களித்தால் மட்டும் அரசாங்கம் மாறிவிடுமா? * என்னைத் தேடி யாருமே வர வில்லையே, நான் ஏன் பதிய வேண் டும்? போன்ற எண்ணற்ற கேள்விகளைக் கேட் டுக் கொண் டிருக்கும் சுமார் 400,000 இந்திய வாக்காளர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டால் வர விருக்கும் 14ஆவது பொதுத் தேர்தலில் அதிசயத்தக்க மாற்றங் களையோ அதிர்ச்சி யூட்டக்கூடிய முடிவு களையோ இந்திய வாக்காளர்களால் செய்ய முடியும் என ஏவுகணை திடமாக நம்புகின்றது! கோப்பிக்கடை அரசியல் சமூகத்தைக் கரைசேர்க்காது! மலேசியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மலேசிய இந்தியர்கள் தற்போது 7%ட்டினை மட்டுமே பிரதிபலிக்கின்றனர் என்ற நிலையில் அர சியலை வெட்டியாகப் பேசும் சமூகமாக முதல் இடத்தை நாம்தான் பெறு வோம் என ஏவுகணை கருதுகின் றது. கூடும் இடமெல்லாம் அரசி யல் பேசும் சமூகம் நாம் என்பதை யாராவது மறுக்க முடியுமா? * கோப்பிக் கடை * இடுகாட்டில் * திருமண வீட்டில் * ஆலயங்களில் * வேலை செய்யுமிடத்தில் என எல்லா ஒன்றுகூடும் இடங் களிலும் அரசியல் இல்லாததை அபூர்வமாகவே காணும் நமது சமூ கத்தில் 400,000 தகுதி பெற்ற (21 வயதிற்கும் மேற் பட்டவர்கள்) வாக்காளர்கள் இன்னமும் மலே சிய தேர்தல் ஆணையத்திடம் பதிந்து கொள்ளாததை ஏவுகணை ஒரு மிகப் பெரிய பிரச்சினை யாகவே கருதுகின்றது. வாக்காளர்களாகப் பதிவு செய்வது மலேசிய இந்திய சமூகத்தின் மிகப் பெரிய கடமை என்பதாகவே ஏவுகணை கருதுகின்றது. என்னுடைய ஒரு ஓட்டு முடிவினை மாற்றுமா? எனக் கேட்கின்ற 200 பேர் வாக்காளர்க ளாகப் பதிந்து ஒரே வேட்பாளருக்கு வாக்களித்தால் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்துவிடும் என்பதை நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தல் முடிவுகளிலிருந்து அறிந்து கொள்ள முடியும். அலட்சியப் போக்கினாலும், கவனக்குறை வினாலும், அக்கறையற்ற தன்மையாலும் அனைத்தையும் இழந்துவிட்ட சமூகமாக உலா வரும் வேளை யில் தகுதிபெற்ற வாக்காளர்களாக உள்ள வர்கள் இந்திய சமூகத்தின் மீது கொஞ்சமாவது பற்றிருந்தால் உடனடியாக வாக் காளர்களாகப் பதிந்து கொள்ள வேண்டும் என ஏவுகணை வேண்டுகோள் விடுக்கின்றது.

பின்செல்

தீர்வை நோக்கி

img
தண்ணீர் - தண்ணீர் - தண்ணீர்! நிரந்தரத் தீர்வு எங்கே

ஸ்ரீ செர்டாங் வட்டார மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்

மேலும்
img
தோட்டத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் யார்?

கடந்த 1973 -ஆம் ஆண்டு தொழிலாளர் அமைச்சின்...

மேலும்
img
மலேசிய இந்தியர்கள் அரசியல் உரிமையை இழக்கலாமா?

மலேசிய இந்தியர்களிடையே காணப்படும் அலட்சியப் போக்கு!

மேலும்
img
கடனில்லாத பட்டதாரி மாணவரை உருவாக்குவோம்!

மலேசிய இந்திய மாணவர்களிடையே தற்போது பரவலாக..

மேலும்
img
இரட்டை மொழித் திட்டம் நடைமுறை சவால்களை எதிர் கொள்ளுமா?

ஓரங்கட்டப்பட்ட இந்திய மாணவர்கள்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img