தண்ணீர் தண்ணீர் தண்ணீர் என ஸ்ரீ செர்டாங் வட்டார மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் நீர் துண்டிப்பு என்றால் பொறுத்துக் கொள்ளலாம், சகித்துக் கொள்ளலாம். ஆனால் பல நாள் பாதிப்பு என்றால் இது இங்குள்ள மக்களை பல இன்னல்களுக்கு உட்படுத்துகிறது என்கிறார் பூச்சோங் தொகுதி மஇகாவின் உதவித்தலைவரும் ஸ்ரீ செர்டாங் மஇகாவின் தலைவருமான கே.எஸ்.சுப்பிரமணியம்.
மின் துண்டிப்பை ஒருவகையில் சகித்துக் கொள்ளலாம். ஆனால் நீர் துண்டிப்பு நீடித்துக்கொண்டே போவது ஒரு வேதனையான விஷயமாகும்.
கடந்த கால சம்பவங்களை நினைவு கூர்ந்தால் செமினி நீர் சுத்திகரிப்பு ஆலை அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாவதாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட தரப்பு இதுகுறித்து தக்க பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை போதிய அளவில் எடுக்கத் தவறி விட்டது போலும்.
இங்குள்ள மக்களின் மனக்குறைகளை ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சித்திமரியாவின் கவனத்திற்கு ஸ்ரீ செர்டாங் மஇகா கிளை எடுத்துச் சென்றது. எங்களின் தொடர்பு எண் 019-3399202. சட்டமன்ற உறுப்பினர் இவ்விவகாரத்திற்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்று கே.சுப்பிரமணியம் மலேசிய நண்பன் தீர்வை நோக்கி வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கழிவுநீர் கலந்து விட்டது. தீர்வுக்கு காலதாமதம் ஆகும் என்று சொல்வதெல்லாம் மக்களின் சிரமங்களுக்கு நிவாரணமாகாது.
ஆயர் சிலாங்கூரும் இதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். 3,28,957 பேர் இந்த நீர்த் தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டார் புக்கிட் மக்கோத்தாவில் கழிவுகள் கொட்டும் காரணத்தால் சிலாங்கூரிலும் புத்ரா ஜெயாவிலும் ஆக மொத்தம் 15 லட்சம் மக்கள் தண்ணீரின்றி தத்தளிக்கிறார்கள் என்று செய்தி வருவது நிலைமை மோசமாகி வருவது என்றே அர்த்தம்.
குடிநீரின்றி மக்கள் தவிப்பது ஒரு தொடர்கதையாக ஆகிவிடக்கூடாது என்று இங்கே வலியுறுத்தப்படுகிறது. லெம்பாகா உருஸ் ஆயர் சிலாங்கூர் வாரியம் இந்த நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் கடமை கடப்பாட்டினை கொண்டுள்ளது என்று இங்கு நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஸ்ரீ செர்டாங் வட்டார மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்
மேலும்கடந்த 1973 -ஆம் ஆண்டு தொழிலாளர் அமைச்சின்...
மேலும்மலேசிய இந்தியர்களிடையே காணப்படும் அலட்சியப் போக்கு!
மேலும்