img
img

தோட்டத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் யார்?
திங்கள் 13 மார்ச் 2017 13:27:43

img

கடந்த 1973 -ஆம் ஆண்டு தொழிலாளர் அமைச்சின் கணக்கெடுப்பின் படி 2,516 தோட்டங்களில் சுமார் 249,620 இந்திய தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்திருப்பதாக ஆவணங்கள் காட்டுகின்றன. இவர்களுடன் வாழ்ந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 500,000-க்கும் கூடுதலாக இருந் திருக்க வேண்டும் என்பதாகவே ஏவுகணை கணிக்கின்றது. தோட்டப் புறங்களில் வாழ்ந்து வந்த இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பது யார்? அவர்களுக்கு குரல் கொடுத்தவர்கள் யார்? மலேசிய இந்தியர்களில் 80விழுக்காட்டினர் தோட்டப்புற பின் புலத்தினைக் கொண்டவர்கள் என்பதனை யாராலும் மறுக்கவே முடியாது. சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியும், மக்களின் மேம்பாடுகளும் மாபெரும் உருமாற்றம் கண்டிருந்தாலும் மலேசிய இந்திய சமூகத்தின் பெரும் பகுதியினர் கேட்பாரற்றவர்களாகவே பரிமாணம் பெற்றுள்ளதை மறுப்பதற்கு யாருக்காவது தைரியம் இருக்கின்றதா என்ற கேள்வியை ஏவுகணை முன்வைக்கின்றது. 1973 ஆம் ஆண்டு தொழிலாளர் அமைச்சின் கணக்கெடுப்பின் படி 2516 தோட்டங்களில் சுமார் 249,620 இந்திய தோட்டத் தொழி லாளர்கள் வேலை செய்திருப்பதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இவர்களுடன் வாழ்ந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 500,000க்கும் கூடு தலாக இருந்திருக்க வேண்டும் என்பதாகவே ஏவுகணை கணிக்கின்றது. தோட்டப் புறங்களில் வாழ்ந்து வந்த இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பது நாதியே இல்லாத அலுவலகத்தினை புதிய பொருளாதாரக் கொள்கையின் அமலாக்கத்தில் தோட்டப் புற இந்தியர்கள் முழுமையாக விடுபட்டதற்கு அஸ்திவாரம் அமைந்திருந்ததன் வழியாக உணர்ந்து கொள்ள முடியும். தோட்டப் புறங்களில் தொழிலாளர்களாக இருந்த இந்தியத் தொழிலாளர்களின் மாதச் சம்பளம் ரிம 300 யும் எட்டாத நிலையில் புதிய பொருளாதாரக் கொள்கையின் அமலாக்கத்தில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களைத் தனியார் தொழிலாளர்களாக அடையாளமிட்டு அரசாங்கத்தின் ஏழ்மை ஒழிப்புத் திட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்த கொடுமைக்கு யாராவது வாய்திறந்தார்களோ? * மலேசிய இந்தியர்களின் அரசியல் பிரதிநிதி ம.இ.கா. * தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (NUPW) * தொழிலாளர் ஆள்பல அமைச்சர்கள் * மலேசிய இந்தியர்களின் பலன்களுக்காக குரல் கொடுத்த எதிர்க்கட்சி இந்திய அரசியல் வாதிகள் போன்றோரில் யாருமே தோட்டத் தொழிலாளர்கள் தேசிய நீரோட்டத்தில் விடுபட்டதற்குக் குரல் எழுப்பவே இல்லை என்பதன் பரிசாக 1980 ஆம் ஆண்டு களில் அகதிகளாக தோட்டப் புறங்களில் இருந்து எவ்விதமான தயார் நிலையும் இல்லாமல் நகர்ப்புறங்களில் புறம்போக்குப் பகுதிகளில் தஞ்சமடைந்த கொடுமைக்கும் யாருமே வாய்திறக்க வில்லை என்பதையாவது பொய்ப்பிக்க முடியுமா? 1970 ஆம் ஆண்டுகளில் தோட்டப் புறங்களில் வாழ்ந்து வந்த இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் ஏழைகளாக இருந்து 1980 ஆம் ஆண்டுகளில் பரம ஏழைகளாக பரிணாமம் பெற்றிருந்த சுழலில் நேர் எதிர் மாறாக பணக்காரர்களாக இருந்த தோட்ட முதலாளிகள் கோடீஸ்வரர்களாக உருமாற்றம் கண் டிருந்த சூழலை ஏவுகணையால் வர்ணிக்கவே முடியவில்லை. ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் என்பார்களே அதைப் போல அரசியல் பிரதி நிதித்துவமே இல்லாத தோட்டப்புறத் தொழிலாளர்களை ஒட்டு மொத்தமாகவே ரிம 7,000 முதல் ரிம 15,000 வரை சேவையை கொடுத்து ஓரங்கட்டப் பட்ட கொடுமையால் தான் இன்று அரங்கேற்றம் கண்டு வரும் சமூகப் பொருளாதார இன்னல்களுக்கு அஸ்திவாரம் என்பதை ஏவுகணை வலியுறுத்த விரும்புகின்றது. சொந்த வீட்டுடைமைத் திட்டம் எங்கே? தோட்டத் தொழிலாளர்களாக வியர்வை சிந்தி உழைத்த இந்தியர்கள் வாழ்வியலை இழந்த சோகக் கதைகளைக் கேட்பாரற்ற சூழலில் 1977 ஆம் ஆண் டில் அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக் தலைமையில் வழங்கப்பட்ட தோட்ட ஈயச்சுரங்க தொழிலாளர்களுக்கான சொந்த வீட்டுடைமைத் திட்டம் ‘தொடர் பான பரிந்துரையின் அமலாக்கம் முழுமையடையாத தற்கு யாராவது காரணங்களைக் கூற முடியுமா? மஇகாவின் வர லாற்றிலேயே மலேசிய இந்தியர்க ளின் நலன்களுக்காக மிகச் சிறந்த தலைமைத் துவத்தைக் கொண்டிருந்த டான்ஸ்ரீ மாணிக்க வாசகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கானல் நீராகிப் போனதற்கு யார் பொறுப்பு என்பதையும் இந்திய சமூகம் முழுமையாக உணர வேண்டும். தொழிலாளர் அமைச்சராக இருந்த டான்ஸ்ரீ மாணிக்கவா சகத்தின் தலைமையில் வழங்கப் பட்ட தோட்ட, ஈயச் சுரங்க தொழி லாளர்களுக்கான வீட்டுடை மைத் திட்டப் பரிந்துரை அரசாங் கத் தால் அங்கீகரிக்கப்பட்டி ருந்தா லும் முழுமையான அமலாக் கம் இல்லாததால் மலேசியத் தோட் டத் தொழி லாளர்களின் சொந்த வீட்டுக்கான கனவுகள் கலைந்து போனதன் விளை வினை நாம் இப்போது அறுவடை செய்து வரு கின்றோம். அரிசிப் பைகளுக்கும், பரிசுக் கூடைகளுக்கும், கோழித் துண்டுகளுக்கும் போராடும் சமூகமாக நம்மை உருமாற்றியி ருப்பதை ஒரு கணம் சிந்தித்தால் தேசிய நீரோட்டத்தில் நாம் விடுபட்டிருப்பதை நிச்சய மாக உணர முடியும். 1973ஆம் ஆண்டில் அமலாக்கம் கண்டிருந்த தோட்ட ஈயச் சுரங்க தொழிலாளர்க ளுக்கான வீட்டுடைமைத் திட்டம் நிறைவேற்றம் கண்டிரு ந்தால் அடி மைகளை விடவும், அகதிகளை விடவும் கேவலமான முறையில் விரட்டியடிக்கப்படும் அவலங்கள் நிச்சயம் நிகழ்ந்திரு க்காது என்பது 100 விழுக்காடு வெளிச்சமாகும். அதோடு குண்டறிய நடவடிக்கைகள் நமது சமூகத்தினை நிச்சயமாகப் பதம் பார்த்திருக்கும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்காது என்பதாகவே ஏவுகணை கருதுகின்றது. அரசியல் பலவீனத்தால் பலியானோம்! மலேசிய இந்தியர்களின் 60 ஆண்டுகால இன்னல்களுக்கு விடியலே இல்லாததற்கு யாரைக் குற்றம் கூறுவது? * மலேசியர்களின் ஒரே அரசாங்கப் பிரதிநிதி மஇகா? * தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்? * மலேசிய அரசாங்கம்? * மலேசிய தோட்டத் தொழிலாளர்கள்? என ஏவுகணையால் எழுதிக் கொண்டே போக முடியும் பட்சத்தில் கடந்த 60 ஆண்டுக ளாக மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட் டிற் காக திட்டங்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை என்பதை யாருமே மறுக்க முடியாது! 1980ஆம் ஆண்டுகளில் நகர்ப்புற முன்னோடிகளாக புலம் பெயர்ந்த தோட்டப்புற இந்தியர் களின் சமூகப் பொருளாதார இன்னல்களுக்கு இன்றுவரை விடி யலே ஏற்படவில்லை. புறம்போக்கு நிலப்பகுதிகள் மலிவு விலை அடுக்குமாடி வீடுகளாக தோற்றம் மாறியதே தவிர வாழும் சூழலில் எவ்விதமான உரு மாற்றமும் ஏற்படவில்லை என்பதற்குச் சான்றுகள் ஆயிரம் உண்டு! 14ஆவது பொதுத் தேர்தலும் விளிம்பில் இருக்கும் நிலையில் நமது சமூகத்தின் பிரதிநிதிகள் வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் வாக்குறுதிகளும், திடீர் திட்டங்களும், கண்காட்சிகளாக செயல்பாடுகளும் அரங்கேற்றம் காண்பதற்கு வரிசை பிடித்து நிற்கும் நிலையில் மலேசிய இந்தியர்களின் பலவீனங்களை முழுமையாக ஆராய்வோம்.

பின்செல்

தீர்வை நோக்கி

img
தண்ணீர் - தண்ணீர் - தண்ணீர்! நிரந்தரத் தீர்வு எங்கே

ஸ்ரீ செர்டாங் வட்டார மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்

மேலும்
img
தோட்டத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் யார்?

கடந்த 1973 -ஆம் ஆண்டு தொழிலாளர் அமைச்சின்...

மேலும்
img
மலேசிய இந்தியர்கள் அரசியல் உரிமையை இழக்கலாமா?

மலேசிய இந்தியர்களிடையே காணப்படும் அலட்சியப் போக்கு!

மேலும்
img
கடனில்லாத பட்டதாரி மாணவரை உருவாக்குவோம்!

மலேசிய இந்திய மாணவர்களிடையே தற்போது பரவலாக..

மேலும்
img
இரட்டை மொழித் திட்டம் நடைமுறை சவால்களை எதிர் கொள்ளுமா?

ஓரங்கட்டப்பட்ட இந்திய மாணவர்கள்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img