மலேசிய இந்திய மாணவர்களிடையே தற்போது பரவலாகக் காணப்படும் பழக்கங்களில் ஒன்று, எஸ்.பி.எம் தேர்விற்கு பிறகு தனியார் கல்லூரிகளில் டிப்ளோமா முடிந்து, கல்விக்கும் முற்றுப்புள்ளி வைப்பது. மற் றொன்று, படிப்பு முடிந்து அதனுடன் கடன் தொகையையும் சுமந்து செல்வது. இந்த இரண்டு வகை சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மலேசிய இந்திய மாணவர்களை நண்பன் குழு கேட்டுக் கொள்கின்றது. 1970, 1980 ஆம் ஆண்டுகளில் மிகச் சிறந்த கல்வி விழிப்புணர்வோடு ‘வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்கு வோம்’ என்ற மாபெரும் இயக்கம் கல்வி புரட்சியை ஏற்படுத்தியதை நண்பன் குழு நினைவு கூர விரும்புகின் றது. கல்வி கடனில்லாத இந்திய சமுதாயத்தினை உருவாக்கவும், குறைந்தபட்சம் இளங்கலை பட்டதாரிகளாக இந்திய மாணவர்களை தயார்ப்படுத்தவும் நண்பன் குழு ‘படிவம் 6 நமது தேர்வு’ எனும் இயக்கத்திற்கும் பிள்ளையார் சுழியிட விரும்புகின்றது. டிப்ளோமா கல்வி போதாது 2016 ஆம் ஆண்டில் எஸ்பிஎம் தேர்வினை எழுதியிருக்கும் சுமார் 35,000 இந்திய மாணவர்களின் பிரதான தேர் வாக தனியார் கல்லூரிகளே இருக்கும் பட்சத்தில் அழையா விருந்தாளியாக வீடு தேடி வரும் தனியார் கல்லூரி வாய்ப்புகளை நம்பி பெரும்பாலான இந்திய மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியாததோடு, தீர்க்க முடியாத கல்வி கடன்களாலும் அல்லல்பட்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். நமது இந்திய சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவமும், சிதறிக்கிடக்கும் உதிரிக் கட்சிகள், அரசாங்க மானியங் களை எதிர்பார்க்கும் அரசு சாரா இயக்கங்கள் ஆகியன இதற்கான வழிமுறைகள் குறித்து இன்று வரை மூச்சே விடாத நிலையில், நமது இந்திய மாணவர் சமூகத்தினை உருமாற்றும் நோக்கத்திலேயே ‘படிவம் 6 நமது தேர்வு’ எனும் இயக்கத்தினை நண்பன் குழு முன்வைக்கின்றது. இந்திய மாணவர்களின் இன்றைய முதன்மைத் தேர்வாக இருந்து வரும் டிப்ளோமா கல்வி மோகத்தினால் ஏற்படும் விளைவுகளை நண்பன் குழு பட்டியலிடுகிறது. * டிப்ளோமா எனப்படும் குறைந்த பட்சக் கல்வியோடு கல்விக்குழு முழுக்கு * டிப்ளோமா தகுதியோடு குறைவான சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் * டிப்ளோமா கல்வியோடு உயர் பதவிகளைப் பெறுவதில் சிக்கல்கள்; * டிப்ளோமா கல்வி தகுதி எதிர்பார்த்த வேலை வாய்ப்புகளை உருவாக்காத அவலம்; * டிப்ளோமா கல்விக்கு வாங்கிய கல்வி கடன் பெரும் சுமையாக மாறுதல்; * டிப்ளோமா தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் இல்லாத சூழல்; * டிப்ளோமா கல்வியின் வழி இளங்கலைப்பட்டப்படிப்பைத் தொடர்வதில் வில்லங்கம்; * டிப்ளோமா சான்றிதழ்களை வழங்குவதில் தனியார் கல்லூரிகளின் ஏமாற்றுச் செயல்கள்; * டிப்ளோமா கல்வியை முழுமையாக முடிக்காத நிலையில் ஏற்படும் சிரமங்கள் என பல்வேறு வகையான இன்னல்களை நமது இந்திய சமூக மாணவர்கள் எதிர்நோக்கியிருப்பதை இதுவரையிலும் யாருமே கண்டு கொள்ளாதது இந்திய சமூகத்தின் அவலமாக நண்பன் குழு கருதுகின்றது. படிவம் 6 நமது தேர்வாகட்டும்’ 2016 ஆம் ஆண்டில் எஸ்பிஎம் தேர்வினை எழுதியிருக்கும் மாணவர்களில் மிதமான தேர்ச்சியை பெற்றிருக்கும் (குறைந்தபட்சம் 5 கிரேடிட்டுகள்) மாணவர்களின் முதன்மைத் தேர்வாக எஸ்டிபிஎம் (Sijil Tinggi Persekolah Malaysia -STPM) எனப்படும் படிவம் 6-க்கான கல்வியை முதன்மைத் தேர்வாக இருக்க வேண்டும் என்ற இலக்கோடு நண்பன் குழு மாபெரும் விழிப்புணர்வு இயக்கத்தினை செயல்டுத்த உள்ளது. எஸ்பிஎம் தேர்விற்குப் பிந்திய படிவம் 6-க்கான கல்வியை இந்திய மாணவர்கள் ஒருவிதமான பய உணர்வோடு (Phobia) கடினமானது என எதையுமே சிந்திக்காமல் தவிர்த்து விடுவதால் இந்திய மாணவர் சமூகத்தினை அறிவார்ந்த சமூகமாக உருமாற்றும் இலக்கு தோல்வி கண்டுள்ளதாகவே நண்பன் குழு கருதுகின்றது. இந்திய மாணவர்கள் எஸ்பிஎம் தேர்விற்குப் பிந்திய உயர் கல்வியாக படிவம் 6-க்கான கல்வி முறை அல்லது அமைப்பு மாற் றப்பட்டுள்ளதை மலேசிய இந் திய சமூகத்தின் பெற்றோர்கள் அறவே உணரவில்லை என்பதை ஆய்வு செய்ய வேண்டியதே இல் லை. மாடுகளுக்கு மூக்கணாங் கயிற்றை அணிவித்து அதனை அடக்குவதைப் போல இன்றைய பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் மூக்கணாங் கயிற்றினைக் கட்டிய தைப் போல் பிள்ளைகளின் முடி விற்கு ஏற்றவாறே உயர் கல்வியை நிர்ணயம் செய்து வரும் பெற்றோர்களால் நமது இந்திய சமூகம் கடனாளிச் சமூகமாக தடுமாற்றம் பெற்றுள்ளதை யாராவது மறுக்க முடியுமா? என நண்பன் குழு கேட்கின்றது! படிவம் 6 அல்லது எஸ்டிபிஎம் கல்வியானது தற்போது புதிய அணுகுமுறையான பருவ கல் வியமைப்பின் வழி (Semester system) மூன்று பருவங்களாக நடத்தப்பட்டு வருவதை இந்தி யப் பெற்றோர்களில் எத்தனை பேர் அறிவோம்! மேலும் தற் போது நாடு தழுவிய நிலையில் படிவம் 6-க்கான கல்வியைப் பெறுவதற்காக பிரத்தி யேகமாக 6-ஆம் படிவ கல்லூரிகளை (Kolej Tingkatan 6 / kolej Pre Universiti) என மலேசியக் கல்வி அமைச்சு ஏற்படுத்தி வரு வதையாவது அறிவோமா? மூன்று பருவங்களில் படிவம் 6-ஐக் கற்பதற்கு குறைந்தபட்ச செலவாக சுமார் வெ. 5,000 மட்டுமே செலவு செய்ய வேண்டியுள்ளதையாவது அறிவோமா? கல்வி தொடர்பில் மலேசியக் கல்வியமைச்சு மேற்கொண்டு வரும் உருமாற்றங்கள் எதையுமே தெரிந்து கொள் ளாமல் கிணற்றுத் தவளைகளாக இருந்து வரும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர் காலத்தினை தரமற்ற தனியார் கல்லூரிகளின் கலர் கலரான வார்த்தை களால் அடமானம் வைத்து விடுவது நியாயமா? என நண்பன் குழு கேட்க விரும்புகின்றது. "பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும்" என்ப தற்கு ஒப்ப மலேசிய இந்திய சமூகம் ஏற்கெனவே சமூகப் பொருளாதார பின்னணியில் மிகப் பெரிய சரிவினைக் கண்டு வரும் நிலையில் மேலும் கல்வி கடன்களைத் தாங்குவதற்குச் சக்தியற்ற சமூகமாக நாம் மாற வேண்டுமா? என்பதே இன்றைய கேள்வியாகும்.
ஸ்ரீ செர்டாங் வட்டார மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்
மேலும்கடந்த 1973 -ஆம் ஆண்டு தொழிலாளர் அமைச்சின்...
மேலும்மலேசிய இந்தியர்களிடையே காணப்படும் அலட்சியப் போக்கு!
மேலும்