எரிபொருளுக்கான உச்ச வரம்பு விலை ஏப்ரல் மாதத்திலிருந்து வாரந்தோறும் அறிவிக்கப்படும் என்று உள்நாட்டு வர்த்தக, கூட் டுறவு, பயனீட்டாளர் நல அமைச்சர் டத்தோ ஹம்ஸா ஜைனுடின் கூறினார்.அந்தந்த வாரத்திற் கான உச்ச வரம்பு விலை திங்கட்கிழமை அல்லது சனிக்கிழமை அறிவிக் கப்படக் கூடும். இப்போது மாதம் ஒரு தடவை அறிவிக்கப் படுகிறது. நடப்பு விலையை பயன்பாட்டாளர் குழப்பமின்றி தெரிந்து கொள்ள இது வகை செய்யும் என்று அவர் குறிப்பிட்டார். சரியான சந்தை விலையை மிகாத வகையில் எரிபொருள் வலையை அரசாங்கம் தீர்மா னிப்பதற்காக அவர் தெரிவித்தார்.மலேசிய பெட்ரோலியம் வர்த் தகர்கள் சங்கத்தால் என்ன விலை தீர்மானிக்கப்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்வதை உறுதி செய்யும் பணியில் இரண்டாவது நிதி யமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனியும் நானும் ஈடுபட்டிருக்கிறோம் என்றார் அவர். லாருட் நாடாளுமன்ற உறுப் பினருமான ஹம்ஸா, பாகான்பாரு தேசிய பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தின் கூட்டத்தை நேற்று தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார். எரிபொருளுக்கான உச்ச வரம்பு விலையை விளம்பரப்படுத்தும் அறிவிக்கை நாடு முழு வதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் என்று ஹம்ணா மேலும் விவரித்தார். எரிபொருள் விலை உயர்த்தப் பட்டுள்ளதா அல்லது குறைக்கப்பட்டுள்ளதா என்பதை பயனீட்டாளர்கள் தெரிந்து கொள்ள இது உதவும் என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்