மலேசிய இந்திய மாணவர்கள் படிவம் 6- க்கான வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில், மலேசிய நண் பன் தொடங்கியிருக்கும் சமூகப் பணி தொடரில் இன்று வலம் வருபவர் உயர் நீதிமன்றத்தில் துணைத் தலைமை பதிவதிகாரியாகப் பணியாற்றி வரும் நித்யா ரவீந்திரன் என்பவராவார். ரவீந்திரன் போகேஸ்- ராஜாத்தி சித்தையா தம்பதியரின் வாரிசான இவர் ஆரம்பக்கல்வியை நெகிரி செம்பிலான் பகாவ் நகருக்கு அருகே உள்ள செனாமா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கினார். அது முடிந்ததும், பகாவ் டத்தோ மன்சோர் இடைநிலைப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்து படிவம் 6-க்கான எஸ்டிபிஎம் தேர்வில் மிகச் சிறந்த தேர்ச்சியினைப் பெற்றார். இதன் காரணமாக, பொதுச் சேவைத் துறையின் உபகாரச் சம்பளம் பெற்று (Biasiswa JPA) அதன்வழி மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் (Universiti Kebangsaan Malaysia- UKM) சட்டத்துறையில் பயிலும் வாய்பையும் பெற்றதாகப் பெருமை யோடு கூறுகின்றார் நித்யா ரவீந்திரன். எஸ்டிபிஎம் தேர்வினை எழுதியதன் வழி தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோருக்கு எவ்விதமான பணச் சுமையையும் ஏற்படுத்தாமல் அரசாங்கப் பல்கலைக்கழகத்தில் உபகாரச் சம்பளத்தோடு படிக்கும் வாய்ப்பையும் பெற்றது மிகச் சிறந்த அடைவு நிலையாகக் கருதும் இவருக்கு, கூடவே சட்டத்துறையில் இளங்கலை கல்வியை முடித்தவுடன் அரசாங்க வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டதை எஸ்பிஎம் தேர்வினை எழுதி முடிவிற்காகக் காத்திருக்கும் மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார் நித்யா ரவீந்திரன்.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்