மக்கள் தங்கள் சுற்று வட்டார சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இங்கு கோம்பி எனப்படும் மக்கள் தொடர்பு சுகாதார நடவடிக்கை இயக்கத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றிய மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சுகாதாரத்தை மட்டுமின்றி வட்டார பாதுகாப்பு சமூக பிரச்சினைகளை களைவதிலும் இயக்கம் செயல்பட வேண்டும். மக்கள் அதிக ஈடுபாடு காட்டும் வகையில் இந்த இயக்கம் செயல் படும் எனும் நம்பிக்கை தெரிவித்த அவர் குறிப்பாக அதிகரித்து வரும் ஏடிஸ் கொசுக்களை துடைத்தொழிக்க இயக்கம் அதிக பங்காற்றும் அதே வேளையில் பொது மக்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண் டார். பொது நடவடிக்கைகளை மேற்கொள்ள இளையோரை அதிகம் கவரும் வகையில் நடவடிக்கை அமைந்திருக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட ஆர். வித்யானந்தன் தாமான் நேசாவில் அமைந்திருக்கும் இந்த இயக்கத்திற்கு தாமான் நேசா குடியிருப்பாளர்களும் முழு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த இயக்கத்தின் தலைவர் ஏ.கே.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த தொடக்க நிகழ்வில் சுகாதார அதிகாரி டாக்டர் பட்ருல் இஷயாம், தீயணைப்பு மீட்புத் துறை அதிகாரி சி.கேசவன் ஆகியோரும் தங்கள் இலாகாவழி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்