ஜாலான் சிம்மோர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 16 இந்தியக் குடும்பங்கள் செங்காட் கிண்டிங் பகுதிக்கு மறு குடியேற்றம் செய்வதற்கு மாநில அரசு இணக்கம் தெரிவித்துள்ளது என்று ஈப்போ மாநகர் மன்ற முன்னாள் கவுன்சிலர் விஜயசந்துரு கூறினார். இக்குடும்பங்கள் தற் போது தங்கியுள்ள பகுதியில் வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதால் நில மேம்பாட்டாளர்கள் இவர்களை வெளியேற்ற நோட்டீஸ் பிறப் பித்ததைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தம்மிடம் முறையிட்டனர். இவ்விவகாரத்தை தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ உஸ்னியின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு அவரின் தொடர் நடவடிக்கையாக 16 இந்தியக் குடும்பங்களும் சங்காட் கிண்டிங் நிலப்பகுதிக்கு மறு குடியேற்றம் செய்வதற்கு இணக்கம் காணப்பட்டது. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நில உறுதிக் கடிதங்களை மாநில நில அலுவலகம் அனுப்பியுள்ளது என்று கூறினார். நேற்று இங்கு நடைபெற்ற பாதிக்கப்பட்ட மக்களுட னான சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முன்னாள் கவுன்சிலர் விஜய சந்துரு, டத்தோஸ்ரீ உஸ்னிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்